ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனிவா தீர்மானத்தின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்யும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச சமூகம் என்பன முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகளை …
Read More »இராணுவத்தை விசாரணை செய்ய ஒருபோதும் அனுமதியோம்
இராணுவத்தினரை விசாரணை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை என்று மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். எங்கள் முடிவில் தெளிவாக இருகக்கின்றோம். எமது நீதித்துறை எமக்கு போதுமானது. இந்த நாட்டில் நடைபெற்றதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை …
Read More »கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணையே ஒரே வழி! – கூட்டமைப்பு திட்டவட்டம்
கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணையே ஒரே வழி! – கூட்டமைப்பு திட்டவட்டம் “கொலையாளிகளே விசாரணை நடத்தினால் எப்படி நீதி கிடைக்கும். எனவே, இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. நீதி, நியாயம் கிடைக்க வேண்டுமானால் சர்வதேச பங்களிப்புடனான விசாரணையே இடம்பெற வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- “இறுதிப்போரின்போது போராளிகள் …
Read More »போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தீவிர பேச்சு!
போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தீவிர பேச்சு! ரஷ்யாவின் ஜெபார்ட் 3.9 ரக போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ரஷ்யா இலங்கையுடன் தீவிர பேச்சுக்களை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் இராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஷ்டி சேவையின் பிரதி இயக்குநர் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட விடயம் தற்போதைக்கு பேச்சுகள் அளவிலேயே காணப்படுகின்றது என இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஷ்டி சேவையின் பிரதி இயக்குநர் மைக்கல் பெட்கோவ் கூறியுள்ளார். குறிப்பிட்ட நவீன போர்க் …
Read More »மாகாணங்களுக்கு டி.ஐ.ஜி.தலைமையில் பொலிஸ் அதிகாரம்! – வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் இணக்கம்
மாகாணங்களுக்கு டி.ஐ.ஜி.தலைமையில் பொலிஸ் அதிகாரம்! – வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் இணக்கம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி.) ஒருவரின் தலைமையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு, புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழு இணக்கம் கண்டது. மாகாண சட்டம், ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்புக் கூறுபவராக அவர் இயங்குவார் என்றாலும் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் அவர் சுயாதீனத்துடன் இயங்குபவராக இருப்பார். இந்த இணக்கப்பாட்டுடன் புதிய அரசமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அதிகாரப் பகிர்வு …
Read More »கடற்படையை வெளியேறக் கோரி முள்ளிக்குளம் மக்கள் போராட்டம்!
கடற்படையை வெளியேறக் கோரி முள்ளிக்குளம் மக்கள் போராட்டம்! கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்றுக் காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் நடைபெற்றது. மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீன்பிடி மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி கடற்படையினரால் …
Read More »இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம்
இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் புதிய தீர்மானம் 36 நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேறியதாக ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட புதிய தீர்மானமே மேற்படி வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று …
Read More »மத அச்சுறுத்தல்கள் தொடர்கிறது ; கிழக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு
மத அச்சுறுத்தல்கள் தொடர்கிறது ; கிழக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறுபான்மையினரின் மத மற்றும் கலாசார நடைமுறைகளுக்கு தற்போது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தாமே தீர்வை காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிழக்கில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வரும் வேலையில்லாப் பட்டதாரிகளை விரைவில் கிழக்கின் …
Read More »இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்
இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் மீது முழுமையான நம்பிக்கைகொண்டு அரசாங்கம் ஜக்கிய நாடுகள் சபையில் கோருவது போல இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்குடா …
Read More »இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தப்பா
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தப்பா இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. அதன் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தையும், சர்வதேச நீதிபதிகளையும் சு.க. நிராகரிப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் அரசின் வெளிவிவகாரக் கொள்கை நாட்டுக்குப் பாதகமாக …
Read More »