2005ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடையூறுகள் , பாதிப்புக்களால் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளை மே மாதம் 1ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும். பாராளுமன்ற மறுசீரமைப்ப மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் …
Read More »ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி பிளஸ் கிடைக்க வாய்ப்பில்லை
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனூடாக அவர்களது தவறுளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். விக்ரமபாகு கருணாரத்ன “முன்னைய ஆட்சியின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமல்போனது. மீள எமக்கு அது கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு …
Read More »முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்ற மறுப்பு – விவசாயக் காணிகளை விடுவிக்க இணக்கம்
மன்னார்- முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கு இணங்கம் காணப்பட்டுள்ள போதிலும், கடற்படை முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, சிறைச்சாலைகள் மறுசீரமைப்ப, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன …
Read More »எரிக் சொல்ஹெய்மின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறது நல்லாட்சி : பந்துல
ஸ்ரீலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்மின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் ஓரங்கமாக புலம்பெயர் சமூகத்தினரின் முதலீடுகளை கவரும் வகையில் சட்டமூலங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டினார். ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு …
Read More »எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யவில்லை
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நடக்காத ஒன்றைப் பற்றி கற்பனையாகச் சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு சுதந்திரக்கட்சி ஒருபோதும் …
Read More »முல்லைத்தீவில் 27 ஆம் திகதி பூரண கர்த்தாலுக்கு அழைப்பு
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆதரவு வழங்கியுள்ளது. நீலமீட்பு போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து, கடந்த 49 நாளாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் …
Read More »நீதிமன்றத்தின் உத்தரவை கிழித்தெறிந்து காலால் மிதித்த சம்பவம் திருகோணமலையில்
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிரதியை வேலையற்ற பட்டதாரிகள் கிழித்தெறிந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாண சபையின் 76 ஆவது அமர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மாகாண சபைக்கு முன்னாலுள்ள பிரதான வீதியை வழிமறித்து வேலையற்ற பட்டதாரிகள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் கிழக்கு …
Read More »கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்க கோரி தேங்காய் உடைத்து போராட்டம்
கேப்பாப்பிலவில் உள்ள தங்கள் பூர்வீகக் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 108 தேங்காய் உடைத்துமக்கள் முன்தினம் நேற்று வழிபாட்டுப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேப்பாப்பிலவில் 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரி மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு …
Read More »வடக்கு, கிழக்கு ஹர்த்தால்: அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அழைப்பு …
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் வியாழனன்று ஹர்த்தால்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாத்திரமல்லாது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல்போனவர்களின் தெளிவான வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய …
Read More »