Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 278)

இலங்கை செய்திகள்

தமிழ் அரசியல் கைதி தாக்கப்பட்டமைக்கு விசாரணை கோரல்

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டமை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென, காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, தாக்குதலை மேற்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, சிறைச்சாலைகள் அத்தியட்சகரிடம் காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் மனுவொன்றையும் கையளித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான தற்கொலைத் தாக்குதல் …

Read More »

தமிழர்களை மீண்டும் ஆயுதமேந்த வைக்க முயற்சிக்கிறதா இந்த அரசு? – சிறிதரன்

மக்களுடைய கண்ணீருக்கும், வலிகளுக்கும் விடை கூற தவறிவரும் இந்த அரசாங்கம், தமிழர்களை மீண்டுமொரு யுத்தம் நோக்கிய பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கிறதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தொழிலாளர்களாக இருந்து அந்தந்த குடும்பங்களை வழிநடத்தி பாதுகாக்க …

Read More »

மே தினப் பாதுகாப்புக்காக 7600 பொலிஸார் களத்தில்!

நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 7 ஆயிரத்து 600 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் கொழும்பில் 4100 பேரும், கண்டியில் 3500 பேரும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் எனவும், இவர்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பாகங்களில் நடக்கவுள்ள அரசியல் கட்சிப் பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொழும்பிலும் கண்டியிலும் நாளைய …

Read More »

கொழும்பில் மட்டும் 11 மே தினக் கூட்டங்கள்!

நாளை நடைபெறவுள்ள மே தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பிலும் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் மொத்தமாக 17 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், இவற்றுள் அதிகப்படியாக 11 கூட்டங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளன எனவும் தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் அந்தக் கட்சியில் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் நாளை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் பேரணி பிற்பகல் 2 மணியளவில் மாளிகாவத்தையில் …

Read More »

ஐ.ம.சு. கூட்டமைப்பை விஸ்தரிக்கத் திட்டம்! – புதிய அரசியல் கட்சிகளை உள்வாங்கவும் ஏற்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது எனவும், அதன் முதற்கட்டமாக தற்போதுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அந்தக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்திருக்கும் கட்சிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். …

Read More »

வாவியில் நீராடிய சிறுமி முதலையின் பிடிக்குள் சிக்கிப் பலி!

தாய், சித்தப்பா மற்றும் சித்தியுடன் வாவியில் நீராடிக் கொண்டிருந்த 13 வயதுச் சிறுமி முதலையால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிந்துள்ள பரிதாப சம்பவம கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மூலங்கமுவ வாவியிலிருந்து வரும் ஓடையொன்றில் நேற்றுமுன்தினம் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர். கல்நேவ, லோலுகஸ்வெவ கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ஹிமிஹாமினி அனுஷிகா எனும் 13 வயதுச் சிறுமியே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். பொலிஸாரும் கடற்படையினரும் …

Read More »

இன ஒற்றுமையைக் குலைக்க கடும் போக்காளர்கள் சதி! – மட்டக்களப்பில் மைத்திரி விசனம்

“இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியது மிவும் அவசியமாகும். ஆனால், இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி இந்த ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு கடும் போக்காளர்கள் சதி செய்கின்றார்கள். எனவே, இந்த விடயம் தொடர்பில் நன்கு சிந்தித்துச் செயற்பட வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “இந்த நாட்டில் வாழுகின்ற மூவின மக்களும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே …

Read More »

சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக இலங்கை மாறியுள்ளது: ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாடுகளுக்கு இலங்கை நல்லதொரு முன்னுதாரண நாடாக மாறியுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இன்று மேற்கத்தேய நாடுகள் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை உணர ஆரம்பித்துள்ளன. நாம் கடந்த முப்பது ஆண்டுகளில் எதிர்கொண்ட அனுபவங்கள், எமது மக்கள் அனைவரும் …

Read More »

மாயக்கல்லி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு – சிறுபான்மை தலைவர்களிடம் ஜனாதிபதி உறுதி

நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் மாயக்கல்லி மலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்த உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் …

Read More »

கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமாண்ட வசதிகள்

தெற்காசியாவிலேயே அதிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டுவரும், கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமாண்ட வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கோபுரத்தில் இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானொலி ஒலிபரப்புகள் சேவைகள் என்பன தொழிற்படவுள்ளதோடு, இதன் மூலம் சகலரும் தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளிபரப்புகளை பெறமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தில் பல விற்பனை அங்காடிகள், விருந்தகங்கள், அரும்பொருட்காட்சி சாலைகள், தலா 450 பேர் அமரக்கூடிய விருந்தகங்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், …

Read More »