2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதால் உள்ளூராட்சி சபைகளை மறுசீரமைக்கவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு அவை கலைக்கப்படும்போது 4,486 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக இருந்தனர். ஆனால், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் தற்போது 6 ஆயிரத்து 619 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் கட்டட வசதி முதல் நிர்வாக …
Read More »இடைக்கால அறிக்கை குறித்து வவுனியாவில் ஆய்வுக் கூட்டம்! – ஒக்டோபர் 8ஆம் திகதி நடக்கும்
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்குச் சாதகமான எத்தகைய விடயங்களை மேலும் சேர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்த மாதம் 8ஆம் திகதி வவுனியாவில் பொதுக் கூட்டத்தை நடத்த ரெலோவின் தலைமைக் குழு தீர்மானித்துள்ளது. வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழு நேற்றுக் கூடியது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கை என்பவற்றில் உள்ள சாதக பாதக விடயங்களை நிபுணத்துவம் …
Read More »கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாழடைந்த கட்டடப் பகுதியில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த சடலம் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »இலங்கையில் பியர் உற்பத்தியை அதிகரிக்க உத்தேசம்!
பியர் உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டு வருவதாக கிறிஸ்தவ மத அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கேள்வியைக் கேட்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுற்றுலாத்துறை சிறப்பாக காணப்படுகின்ற வெளிநாடுகளுக்குச் சென்று பார்த்தால் அங்கு சிறிய …
Read More »ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததும் பிணைமுறி மோசடியாளர்கள் தண்டனை பெறுபவர்!
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததும் குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். “ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் அது மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும். பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக …
Read More »தேர்தலுக்குத் தயாராகுங்கள்! – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் பணிப்புரை
தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது ஆளும் கூட்டணி அரசின் தலைமைப்பீடம். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வராத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என உயர்மட்ட சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியதையடுத்தே அரச தலைமைப்பீடம் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கைவிடவேண்டிய நிலை ஏற்படுமென சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரசதலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே …
Read More »அரசியலில் களமிறங்குகிறார் மைத்திரியின் மகள் சத்துரிகா! – மாகாண சபைத் தேர்தலில் போட்டி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிகா சிறிசேன தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்றும், அவை முடிவடைந்த பின்னர் தான் அரசியலில் களமிறங்குவதற்கான காரணத்தை விளக்கும் வகையில் அவர் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தகவல் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சிபெற்ற அவர் தற்போது வணிகத்துறையில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அவற்றைவிடுத்து முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கான பிள்ளையார் சுழியாகவே ‘ஜனாதிபதி தந்தை’ …
Read More »தாயக மண்ணில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது திலீபனின் நினைவேந்தல் வாரம்!
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப் படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வு தாயக மண்ணில் நேற்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வார நிகழ்வு நல்லூர் தெற்கு வீதியில் …
Read More »ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை மனதார வரவேற்கின்றது கூட்டமைப்பு! – அரசு மந்தப் போக்கில் தொடர்வது மாபெரும் தவறு எனவும் சுட்டிக்காட்டு
இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்றுள்ளது. இனியும் விதண்டாவாதக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்காமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுத் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு …
Read More »ஐ.நா. ஆணையாளரின் கருத்து அபத்தமானது! – அடியோடு நிராகரிக்கின்றது இலங்கை அரசு
இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, இவை அபத்தமானதும், அபாண்டமானதெனவும் சாடியுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன், 36ஆவது கூட்டத்தொடரின் …
Read More »