Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 159)

இலங்கை செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 27 பேர் காரைக்கால் வந்தனர்

புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், என மொத்தம் 27 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை எல்லையில் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி 27 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், 27 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலைச் செய்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் …

Read More »

முல்லை தீவு மர்மம்: இலங்கை விரைந்த அமெரிக்க குழு!

வழக்கத்துக்கு மாறாக முல்லை தீவு கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறதாம். முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்கா குழு இலங்கை விரைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பல முறை முல்லை தீவு கடல் தன்மையில் மாற்றம் காணப்பட்டுள்ளது. நீர் மட்டம் திடீரென் ஐந்து அடி அதிகரித்ததாகவும், கடல் கொந்தளித்ததாகவும், கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும் அங்கு இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சுனாமி …

Read More »

புது வருடத்துக்கு முன்னர் மாற்றம்.!

எதிர்வரும் சிங்களப் புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

சம்பந்தன் பதவி விலக வேண்டும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் …

Read More »

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இராப்போசன விருந்துபசாரம் வழங்கிய அமைச்சர் ராஜித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இராப்போசன விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். நல்லாட்சி அரசின் அனைத்து உறுப்பினர்களதும் வெற்றியாக இந்தத் தீர்மானம் கருதப்படுகின்றது. இந்த வெற்றியை கொண்டாடும் நோக்கில் சுகாதார அமைச்சால் இராசாப் போசன விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டுள்ளது. ஆமைச்சர் ராஜிதவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் நான்கு …

Read More »

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல்கள் பேஸ்புக்வில் தீவிரம்

இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பேஸ்புக்கின் செல்வாக்கு மற்றும் இலங்கையின் பேஸ்புக் பயன்பாடு என்பன தொடர்பாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஏற்கனவே அவர்களுக்கு எதிராக காட்டப்பட்டு வந்த வெறுப்பூட்டும் செயற்பாடுகள் காரணமாக இருந்ததாக அது தெரிவித்துள்ளது. இந்நிலையில், பேஸ்புக்கின் செயற்பாடுகள் …

Read More »

ஜெனீவாவில் ஒவ்வொரு வருடமும் பதிலளிக்கும் நிலை மாறவேண்டும் – சரத் அமுனுகம ஆவேசம்

இலங்கை அரசு தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட சகல விடயங்களையும் நாம் ஏற்கவில்லையென, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு ஜெனீவாவில் வலியுறுத்தப்பட்ட போதிலும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். மேலும், இலங்கை அரசமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை …

Read More »

இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு பாகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவு!

பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கான இலங்கையின் முயற்சிக்கு, நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இலங்கையும், பாகிஸ்தானும் ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்களால் …

Read More »

நல்லாட்சி அரசுக்கு முடிவுகட்ட கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைபவனி

நாட்டின் தேசிய சொத்துக்களை சூரையாடும் கூட்டணி அரசுக்கு முடிவுகட்ட பாரிய நடை பவனியொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி கண்டியிலிருந்து கொழும்புக்கு பேரணியாக வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் கையெழுத்துக்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. நல்லாட்சியின் மூலம் ஜனநாயக சீர்த்திருத்தமொன்றை மக்கள் எதிர்பார்த்த போதிலும், இன்றுவரை எவ்வித எதிர்பார்ப்புகளும் பூர்த்திசெய்யப்படாத நிலையிலேயே மக்கள் இவ்வாறு வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மைத்திரி …

Read More »

இலங்கைக்கான வரிச்சலுகையை மீண்டும் அங்கீகரித்தது அமெரிக்கா

டொனால்ட் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் திட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகாரம் வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த வரிச்சலுகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. நடப்பு வருடத்திற்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கடந்த 23ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாகவும், அதில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகத்தின் …

Read More »