Monday , April 15 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இராப்போசன விருந்துபசாரம் வழங்கிய அமைச்சர் ராஜித

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இராப்போசன விருந்துபசாரம் வழங்கிய அமைச்சர் ராஜித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இராப்போசன விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். நல்லாட்சி அரசின் அனைத்து உறுப்பினர்களதும் வெற்றியாக இந்தத் தீர்மானம் கருதப்படுகின்றது.

இந்த வெற்றியை கொண்டாடும் நோக்கில் சுகாதார அமைச்சால் இராசாப் போசன விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டுள்ளது.

ஆமைச்சர் ராஜிதவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் நான்கு மணித்தியாலங்கள் வரையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முழுமையாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமருக்கு மிகவும் பிடித்தமான கறுப்பு கோபியொன்றை ராஜிதவின் மனைவி சுஜாதா சேனாரட்ன வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் முரண்பாடுகளைக் களைந்து இன் முகத்துடன் ராஜிதவின் இல்லத்தை விட்டு வெளியேறிச் சென்றதாக அறிய முடிகிறது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …