Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 71)

செய்திகள்

News

2020 இலும் ஜனாதிபதி யார்?

கடந்த 2005 ஆம் ஆண்டும் 2010 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது ஜாதிக ஹெல உறுமய எனவும் 2020 ஆம் ஆண்டிலும் தாமே அதனைத் தீர்மானிப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். கடந்த காலத்தில் …

Read More »

நாட்டை விட்டு புறப்பட்டார் மைத்திரி

Maithripala Sirisena

தஜிகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி சற்று முன்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் 50 பேர் கொண்ட குழாமும் பயணமாகியுள்ளது.

Read More »

பொசனை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 படையினர்!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை அனுராதபுர வலைய பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். பொசனை முன்னிட்டு அனுராதபுரம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பாதுகாப்பிற்காக 4000 பொலிஸார், 2000 இராணுவத்தினர், 1000 சிவில் பாதுகாப்பு படையினர், புலனாய்வு அதிகாரிகள், கடற்படையினர் உள்ளடங்கலாக 8000 பேர் கடமையில் ஈடுபடவுள்ளதாகவு அவர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் புனித பூமி மற்றும் குட்டம் பொகுண ஆகியன …

Read More »

அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

அடுத்த அமைச்சரவை கூட்டம் வரும் 18ம் திகதி இடம்பெறும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். வரும் வாரத்திற்குள் ஜனாதிபதியுடனான லடாய் தீர்ந்து, அமைச்சரவை கூடுமா அல்லது ஜனாதிபதியை தவிர்த்து பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூடுமா என்பது குறித்து மனோ கணேசன் எதுவும் குறிப்பிடவில்லை.

Read More »

உலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை

உலக அமைதி சுட்டெண் தரவரிசையில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், இந்த வருடம் இலங்கை 72 ஆவது இடத்தில் உள்ளது. இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டில், 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, நடப்பாண்டில் 72 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள 163 நாடுகளுக்கிடையில் குறித்த மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் …

Read More »

குருணாகலையில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

மசாஜ் பார்லரில்

குருணாகலை – கடுபொத நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. நேற்றிரவு இந்த தீப்பரபல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. பின்னர் , நிகழ்விடத்திற்கு வந்த குருணாகலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Read More »

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு!

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மகாநாயக்க தேரர்களை சந்க்கவுள்ளனர். அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தவர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாட்டிலுள்ள மூன்று பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் இருந்தால், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேரர்கள் அறிவித்திருந்தனர். அத்துடன் மகாநாயக்கர்களும் பதவி விலகிய முஸ்லிம் பிரதிநிதிகளை விரைவில் சந்திக்க தயாராகவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த …

Read More »

மைத்திரியின் எச்சரிக்கை!

மைத்திரிபால சிறிசேன

இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணிப்பேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை நடந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரித்திருந்தார். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எனினும், நேற்று அலரி மாளிகையில் …

Read More »

சிங்கப்பூர் பறக்கும் ரணில்

ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திடீர் பயணமாக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன நோக்கத்திற்காக சிங்கப்பூர் செல்கிறார் என்பது பகிரங்கமாக கூறப்படாதபோதும் ரணிலின் இந்த விஜயம் தற்போதைய நிலையில் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ரத்துச் செய்யும்வரை அமைச்சரவைக் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இன்று இடம்பெறவிருந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை …

Read More »

நாட்டில் தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல்

பொன்சேகா

இலங்கையில் பாதுகாப்பு நிலைமை சுமுக நிலைக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தெரிவு குழுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அது சட்டரீதியான தெரிவு குழுவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த குழு நிகழ்ச்சி நிரலுக்கமைய தெரிவு செயற்படுவதாகவும், ஒரு நபரின் தேவைக்கு ஏற்ப அதனை மாற்ற முடியாதென …

Read More »