யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தாய் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட இராணுவத்தினர் 3 இளைஞா்களை கைது செய்துள்ளதோடு இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைக்கபப்ட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »கூட்டமைப்பால் மகிழ்ச்சி வெள்ளத்தில் விஜயகலா
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிவரும் ஆதரவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வலி வடக்கில் …
Read More »அனைவருக்கும் மைத்திரி முக்கிய அறிவித்தல்
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு தான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்கு ஜனாதிபதி மற்றும் ரெஜிமென்ட் வர்ணமளிப்பதை அடையாளப்படுத்தும் ரண பரஷூவ, ரெஜிமென்ட் பரஷூவ விருது விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாய் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் பாதிக்கப்படத்தக்க …
Read More »வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் மந்துவிலில் சம்பவம்
தனது பிறந்த நாளுக்காக பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்றபோது வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளார். குறித்த சம்பவம் மந்துவில் மேற்கில் இடம் பெற்றது. சம்பவத்தில் மந்துவில் மேற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 25 வயதுடையவரே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார். குறித்த இளைஞன் கடைக்கு சென்றபோது அவரை வழிமறித்த இனந்தெரியாத நபர் ஒருவர் அவர்மீது வாள் வெட்டுதாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது இளைஞனின் கை துண்டாடப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார …
Read More »பொன்சேகாவுக்கு கோட்டா திடீர் அழைப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படும் நோக்கில் , அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா முயற்சித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் மனோஜ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து சரத் பொன்சேக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தாகவும் , அதில் பழைய …
Read More »கொழும்பு தலைமையகத்திற்குள் நுளைந்த சந்திரிகா!
கொழும்பு – 10 டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விஜயம் செய்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பொன்று தற்போது இடம்பெறுகின்ற நிலையில் திடீரென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க திடீரென அங்கு பிரசன்னமாகியுள்ளார். எதிர்பாராத விதமாக சந்திரிகா நுளைந்ததால் அங்கு இருந்த கட்சி முக்கியஸ்தர்கள் திகைப்படைந்துள்ளதுடன் இந்த சம்பவத்தால் மைத்திரி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அன்மைக்காலமாக மகிந்தவுடன் நல் …
Read More »கட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சகோதரிகள் இருவர் கட்டி அணைத்தபடி இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 வீடுகள் அழிந்துள்ளன. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் பொதுமக்கள் என பலரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இன்னும் மாயமானவர்களை தேடும் பணியும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீட்பு படையினர் கட்டியணைத்தபடியே இறந்து …
Read More »மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு!
மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கான இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இன்று அவர் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார். பிரதமருடன் இந்த விஜயத்தில் அமைச்சர்கள் பட்டாளமும் இணைந்துள்ளது. இன்று அவர் வவுனியா மருத்துவமனையில் இரண்டாவது சுகா தாரத் துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கவுள்ளார். அதோடு நெதர்லாந்து அரசால் வழங்கப்படவுள்ள …
Read More »மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பெண்பித்தன் கருணா !
முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பெண்பித்தன் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார். தமிழனத்துரோகியான கருணா மீண்டும் பெண்கள் மீதான பாலியல் செயற்பாட்டை அதிகப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் பெண்கள் மிகவும் அவதானமாக வீட்டில் இருக்க வேண்டுமெனவும், வெளியே செல்வதாயின் தனிமையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காமப்பித்தன் என பலராலும் வர்ணிக்கப்படும் கருணா வயோதிபப் பெண்களையே இலக்கு …
Read More »