நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காக சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு துரிதமாக ஒன்று திரள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அரசியல், பொருளாதார, சமூக சவால்களை நோக்கும்போது மிக குறுகிய காலத்திற்குள் எவரும் எதிர்பார்க்காத மாபெரும் அதர பாதாளத்தில் நாடு விழுந்துவிடும் எனத் தெரிவித்த ஜனாதிபதி , அந்த சவாலிலிருந்து நாட்டை காப்பதற்கு …
Read More »தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் முக்கிய அறிவிப்பு?
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துமூலமான அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 10 முதல் டிசம்பர் 8 ஆம் திகதிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் …
Read More »வெற்றிப் பாதையில் மைத்திரி அணி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சகல சவால்களையம் தாண்டி வந்துள்ளது. எனவே, இன்றிலிருந்து சு.க. வெற்றிப் பாதையிலேயே செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். “இலங்கையை இரு தாசாப்தங்களுக்கும் அதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் சு.கவின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கப்படும்” என்று அவர் …
Read More »ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு, கலாசார ரீதியிலான சிறுவர்களையன்றி, தொழில்நுட்ப ரீதியிலான பிள்ளைகளை தற்போது சந்திக்க நேரிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 557 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.
Read More »கோத்தாபயவின் அறிவிப்பு
பயங்கரவாதமும், அடிப்படைவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று (02) நடைபெற்ற முற்போக்கு தொழிற்சங்கங்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், முற்போக்கு தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அடிப்படைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டின் பாதுகாப்பு …
Read More »இலங்கையில் குவிக்கப்படும் செல்வம்! சஜித்
நாட்டின் செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறையாக முதலாளித்துவ பொருளாதார முறை கருத்தப்பட்டாலும் வளங்களை பகிர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் ஏழை மக்கள் பொருளாதார செயற்பாடுகளிலிருந்து தூரப்படுத்தப்படுகிறார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். முதலாளித்துவ பொருளாதாரத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் பொருளாதார முறையின் ஊடாக திரட்டப்பட்ட செல்வத்தை சோசலிஸ முறையின் ஊடாக பிரஜைகளுக்கு வழங்கக் கூடிய கலப்பு பொருளாதார முறைமை ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். மாத்தறை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட ஹஸ்திராஜகம மாதிரி கிராமத்தை …
Read More »தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..? பரபரப்பு தகவல்..!
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் யாரும் எதிர்பாராத விதமாக தெலுங்கானா ஆளுநராக நேற்றையதினம் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக தமிழிசை வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவி தமிழகத்தில் காலியாக உள்ளது. இந் நிலையில் பா.ஜ.கவின் தமிழக அடுத்த தலைவராக எச் ராஜா வா? அல்லது பொன் ராதா ? வருவார்கள் எனப்பேசப்படுகின்ற நிலையில் , அடுத்த தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு கொண்டிருப்பது …
Read More »சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி!
சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி! சபைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபைத் தலைவர் பதவியிலிருந்தே பிரதமரை நீக்க தீர்மானிக்கப்பட்டுளது. குறித்த விகாரையின் பெரும்பான்மையினர் இதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் களனி ரஜா மகா விகாரையின் பங்களிப்பாளர் சபை கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விகாராதிபதி சங்கைக்குரிய பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த …
Read More »நாட்டின் இறைமையை தாரைவார்க்க மாட்டோம் – கோட்டாபய ராஜபக்ஸ
உலக ஒழுங்கின் அடிப்படையில் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒன்று என்றும் எனினும் , எந்தவொரு நாட்டுக்கும் அடிமைப்பட்டும், நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் ஒருபோதும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தேசிய மாநாடு இன்று பத்தரமுல்லை, புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் , பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் …
Read More »மனோ ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டாராம்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும் அவர் யார் என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்புத்தலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவில்லை. ஏனைய கட்சிகள் தமது வேட்பாளர்களை உடனடியாக அறிவித்திருந்தாலும் தற்போது அவர்களுக்குள் …
Read More »