சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை கிழித்தெறிந்த தவநாதன் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்தள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தகோரி கடந்த 86 ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார். எனினும் இந்த விடயத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சி கூட்டத்தில் பேசியதன் பின்னர் 14 ஆம் திகதி விசேட அமர்வை நடத்தி …
Read More »மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை நிறுத்தவேண்டும்
மலையகப் பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை நிறுத்தவேண்டும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக மலையகப் பெண்கள் செல்வதை நிறுத்துவதோடு மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைய வேண்டுமென தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக வேலைக்கு செல்வோர் அனுப்பும் பணமே ஸ்ரீலங்காவின் முதலாவது அந்நிய செலாவணி வருமானத்தைப் பெற்றுத் தருவதாகவும் இதில் மலையகப் பெண்களின் பங்களிப்பும் பாரியளவில் காணப்படுவதகாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளர் தேசிய சங்கம் …
Read More »வடக்கு கிழக்கு இணைக்கப்படாத தீர்வினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை
வடக்கு கிழக்கு இணைக்கப்படாத தீர்வினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்காது முன்வைக்கப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செவ்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இதனால் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மேற்கொள்ளும் போராட்டங்களை வடக்கு கிழக்கினை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் …
Read More »இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை: கடற்படைத் தளபதி
இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை: கடற்படைத் தளபதி கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்தார். நேற்றையதினம் கச்சதீவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் கடலில் ரோந்து செல்லும் கடற்படையினர் துப்பாக்கியைப் பயன்படுத்துவதாயின் அதற்காக கடற்படைத் தலைமையிடம் அனுமதி கோரப்பட வேண்டும். அவ்வாறான எந்த அனுமதியும் கோரப்பட வில்லை. …
Read More »அதிகாரத்தை கைப்பற்றுவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம் – அமைச்சர் கயந்த
அதிகாரத்தை கைப்பற்றுவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம் – அமைச்சர் கயந்த வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி, நாடாளுமன்றத்தையும் குழப்பிடியத்து ஆட்சி அதிகாரத்தைக் விரைவில் கைப்பற்றுவதற்கே கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அஸ்கிரிய பீட மாகாநாயக்கரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். …
Read More »முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்
முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவியுமான ரேணுகா ஹேரத் தமது 72ஆவது வயதில் காலமானார். சுகயீனம் காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை வலப்பனையில் நடைபெறவுள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் …
Read More »தமிழ் அரசியல்வாதிகள் நல்லாட்சிக்கு வலுசேர்க்கின்றனர்
தமிழ் அரசியல்வாதிகள் நல்லாட்சிக்கு வலுசேர்க்கின்றனர் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை கடந்த எட்டு வருட காலமாக கையளிக்க முடியாத இந்த அரசாங்கம், இன்னும் இரண்டு வருட காலத்தில் எதனை சாதிக்கப்போகின்றது என்ற நம்பிக்கையில் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தலைமைகள் உடன்பட்டுள்ளனர் என்ற விடயம் தெரியவில்லையென காணாமல் போனோரின் உறவுகள் அங்காலாய்க்கின்றனர். காணாமல் போன தமது உறவுகளை கையளிக்குமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், …
Read More »சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள்
சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் போராளிகள் இன்று சமுகத்தினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யுத்ததிற்கு முன்னர் பெண் போராளிகளுக்கு காணப்பட்ட மரியாதை யுத்ததின் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு விடியலை நோக்கிய …
Read More »வடக்கு மாகாணத்தில் 549 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
வடக்கு மாகாணத்தில் 549 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் 549 பேருக்கும், 480 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளையும், ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களையும் வடமாகாண ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது 549 பட்டதாரிகளுக்கும் 480 ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. …
Read More »சொகுசு கார்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நிலை தெரிவதில்லை: பன்னங்கண்டி மக்கள்
சொகுசு கார்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நிலை தெரிவதில்லை: பன்னங்கண்டி மக்கள் மழைக்கும் வெயிலுக்கும் ஈடுகொடுக்க முடியாத தகரக் கொட்டில்களில் வாழும் தமது நிலை, அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லையென கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உறுதியற்ற நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் பன்னங்கண்டி மக்கள், கடந்த 10 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு …
Read More »