15 நாட்களாகத் தொடர்கிறது கேப்பாப்பிலவு அறவழிப் போராட்டம்! இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 15ஆவது நாளாகவும் தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த 7 வருடங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் அறவழிப் …
Read More »இலங்கையிடம் கப்பம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்
இலங்கையிடம் கப்பம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை விடுப்பதாயின் அதற்காக கப்பம் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கொடியுடன் எரிபொருள் ஏற்றி வந்த கப்பல் நேற்றைய தினம் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது. துபாய் நிறுவனமொன்றில் பதிவு செய்யப்பட்ட எரிஸ் 13 எனும் மேற்படி கப்பலில் 8 ஸ்ரீலங்கா மாலுமிகள் கடமை புரிவதாக கடற்படை தெரிவித்திருந்தது. கப்பலை தேடும் ஐரோப்பிய சங்கத்தினர் கொள்ளையர்களை தொடர்பு கொண்ட போதே …
Read More »தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன்
தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன் ஜெனீவா தீர்மான விடயத்தில் தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா தீர்மான அமுலாக்கத்திற்கு மேலதிக கால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், கால அவகாசம் கேட்பதற்கும் கூட்டமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் …
Read More »புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம்
புலிகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்க முடியாது : ஐரோப்பிய நீதிமன்றம் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலிலிருந்து நீக்க மறுக்கும் வகையிலான தீர்ப்பொன்றினை ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. சர்வதேச மனிதநேயச் சட்டத்தின் கீழ், போரில் ஈடுபடும் ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற வகைக்குள் அடக்கப்படலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கான …
Read More »மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அவசியம் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்களை மேற்கொள்ளவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்குழு ஒன்று நேற்றும், இன்றும் கொழும்பில் நடத்திய இணைக்குழுக் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஸ்ரீலங்கா சித்திரவதை உள்ளிட்ட …
Read More »காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம்
காணாமல்போனோரின் விடயத்தைக் காணாமல் ஆக்க முயல்கின்றது அரசு! – உறவினர்கள் கடும் விசனம் “காலத்தை இழுத்தடித்து – எங்களை அலைக்கழித்து, காணாமல்போனோர் பிரச்சினை காணாமல்போகச் செய்வதற்குக் நல்லாட்சி அரசு முயற்சிக்கின்றதா ? இவ்வளவு நாட்களாகப் போராடி வருகின்ற எங்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது இந்த அரசு.” – இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 24 ஆவது நாளாக …
Read More »மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு!
மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை வியாழக்கிழமை ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தனது பிரசார வேலைகளுக்காக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பயன்படுத்திய வகையில் அந்நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய 16 கோடி ரூபாவைச் செலுத்தத் தவறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின்கீழ் மஹிந்தவுக்கு எதிராக ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு …
Read More »தீவிரவாதிகளை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்க சி.ஐ.ஏ-வுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு
தீவிரவாதிகளை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்க சி.ஐ.ஏ-வுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் மீது ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) மூலமாக தாக்குதல் நடத்தி அழிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ-க்கு அதிபர் டிரம்ப் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டு பாதுகாப்பு துறையை மறுகட்டமைப்பு செய்து வருகிறார். இந்நிலையில், தீவிரவாத தாக்குதல்களில் சந்தேகப்படும்படியான தீவிரவாதிகள் மீது ட்ரோன்கள்-களை (ஆளில்லா விமானங்கள்) …
Read More »உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு
உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரமும், 3-வது இடத்தை …
Read More »பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. அவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி …
Read More »