அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி பன்னங்கண்டிக் கிராம மக்களின் போராட்டம் தொடர்கின்றது! கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி இன்று புதன்கிழமை 12 நாளாகவும் போராட்டம் நடத்தினர். “மத்திய வகுப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட குறித்த காணியில் நீண்ட காலமாக வாழ்கின்றபோதும் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. அதனால் வீட்டுத் திட்டமோ ஏனைய அரச உதவிகளையோ பெற முடியாதுள்ளது. எமது கிராமங்களில் அடிப்படை …
Read More »காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீடித்த கடும் வறட்சியால் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 100 கன அடிக்கும் குறைவான அளவே தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 30 அடிக்கும் கீழாக குறைந்தது. பல மாதங்களுக்கு பிறகு கடந்த 2 நாட்களாக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு …
Read More »ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல்
ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராமசீதா. இவர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்வதாகவும், ஜெயலலிதா இறந்த நிலையில் தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் பேசினார். மேலும், இந்த உண்மையை மறைத்ததால், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறினார். இவரது …
Read More »ஜாமீனில் வெளியே வருவோர் கருவேல மரங்களை அகற்றவேண்டும்: அரியலூர் கோர்ட்டு உத்தரவு
ஜாமீனில் வெளியே வருவோர் கருவேல மரங்களை அகற்றவேண்டும்: அரியலூர் கோர்ட்டு உத்தரவு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலமரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அதனை அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மேலும் மரம் அகற்றும் பணியை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலமரங்கள் அகற்றும் …
Read More »அமைச்சர்கள் பேச்சு வார்த்தை தோல்வி: நாகை மீனவர்கள் உண்ணாவிரதம் நீடிப்பு
அமைச்சர்கள் பேச்சு வார்த்தை தோல்வி: நாகை மீனவர்கள் உண்ணாவிரதம் நீடிப்பு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன் நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் கலெக்டர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், தமிமுன் அன்சாரி ஆகியோர் வந்தனர். அப்போது அமைச்சர்களை மீனவ பெண்கள் முற்றுகையிட்டு …
Read More »புதுக்கோட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயம்
புதுக்கோட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயம் புதுக்கோட்டை மாவட் டம், திருக்கட்டளை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் தனியார் வேன் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வேனில் சென்றனர். வேனை மேட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் ஓட்டினார். திருக்கட்டளை மெயின் ரோட்டில் செல்லும் …
Read More »பஷிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
பஷிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி குற்றச்சாட்டில் முதலாவது குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள பஷில், இன்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் …
Read More »நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஒ.ஏ டி சொய்சா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா …
Read More »நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர்
நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால நீடிப்புக்கு உடன்பட்டுள்ளது என்ற விடயத்தில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மக்களுக்காக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவாக உணராதவர்களே கூட்டமைப்பு மீது குற்றம்சுமத்துகின்றனர் என்று சாடியுள்ளார். மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி வலம்புரி வாசகர் வட்டமும் மாதர் கிராம அபிவிருத்திச் …
Read More »மஹிந்தவின் நிலைப்பாட்டிலேயே மைத்திரி
மஹிந்தவின் நிலைப்பாட்டிலேயே மைத்திரி யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல் தொடர்பில் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று மஹிந்த ராஜபக்ச கூறியிருந்த நிலையில், தற்போது இராணுவத்தை விசாரணை செய்ய விடமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
Read More »