Monday , October 20 2025
Home / செய்திகள் (page 494)

செய்திகள்

News

இயற்கையை நாம் அழித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்

இயற்கையை நாம் அழித்தால்

இயற்கையை நாம் அழித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் இயற்கையை நாம் அழிவுறச் செய்தால் அதன் விளைவால் ஏற்படும் அழிவையும் நாமே எதிர்க்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பாதுகாப்பான இலங்கை எனும் தொனிப்பொருளின் கீழ், மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன்கோயில் வீதியில் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் 12.5 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) இன்று …

Read More »

தமிழர்களின் போராட்டங்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் ஒப்பிடாதீர்

தமிழர்களின் போராட்டங்களை

தமிழர்களின் போராட்டங்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் ஒப்பிடாதீர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் மேற்கொள்ளும் நியாயமான போராட்டங்களை தென்னிலங்கையில் கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் போராட்டங்களுடன் ஒப்பிட வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் அரச காணிகளை தமக்கு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும், பூர்வீகமாக தாம் வாழ்ந்த நிலங்களை தம்மிடம் கையளிக்குமாறு வலியுறுத்தியே போராடுவதாகவும் …

Read More »

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்

உள்ளக விசாரணையே அரசின் திட்டம்! – உலக நாடுகளும் பச்சைக்கொடி என்கிறார் மங்கள “அனைத்துலக விசாரணைப்பிடிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுத்தது சர்வதேசமட்டத்தில் தேசிய அரசு அடைந்த மிகப்பெரிய வெற்றியாகும்” என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். “போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசமைப்பில் இடமில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். “உரிய வழியில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்கியுள்ளன. எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் …

Read More »

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் நேற்றுக் கவனயீர்ப்புப் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன. அதன் இறுதியில் ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கவென மனுக்களும் கையளிக்கப்பட்டன. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இராணுவத்திடம் காணிகைளைப் பறிகொடுத்த மக்கள் …

Read More »

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள்! – சூக்கா சுட்டிக்காட்டு

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள் - சூக்கா

மைத்திரி ஆட்சியிலும் கொடூர சித்திரவதைகள்! – சூக்கா சுட்டிக்காட்டு “ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் 6 கொடூரமான சித்திரவதைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று பதிவாகியுள்ளது.” – இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இலங்கையில் …

Read More »

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள் - ஜகத் ஜயசூரியவை

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை “வவுனியா ஜோசப் முகாமில் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தெளிவான – உறுதியான ஆதாரங்கள் போதியளவு உள்ளன. இந்த முகாமின் பொறுப்பாளராகப் பணியாற்றிய இப்போதைய பிரேஸில் தூதுவர் ஜகத் ஜயசூரியவை விசாரணை செய்ய வேண்டும்.” – இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கோரியுள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள …

Read More »

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு! – மங்களவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் விட்டுக்கொடுக்காது கூட்டமைப்பு! – மங்களவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி “சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொடுப்புக்குத் தயாரில்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகளைச் செய்வதற்கு அரசமைப்பில் எந்தத் தடையும் இல்லை. அப்படி ஏதாவது தடை இருக்கின்றது என்றால் அந்தத் தடையை நீக்கி விட்டு அதனைச் செயற்படுத்துங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களை

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி மருதங்கேணியிலும் கவனயீர்ப்புப் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினது போராட்டம் வடக்கில் ஏற்கனவே 3 மாவட்டங்களில் தொடரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மருதங்கேணியில் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக உள்ள மரம் ஒன்றின் கீழ் நேற்றுப் புதன்கிழமை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதில் வழங்க வேண்டும், அவர்களை மீண்டும் …

Read More »

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியீடு!

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள்

கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியீடு! சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய்க்கப்பலில் பணிபுரிந்துகொண்டிருந்த 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன என்று இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்தகவல்களின்படி இந்த 8 இலங்கையர்களின் பதவிகளும் இருப்பிடங்களும் வருமாறு:- 1) கப்பல் கப்டன் நிகலஸ் என்டனி (மட்டக்குளி) 2) பிரதம அதிகாரி ருவன் சம்பத் (மத்துகம) 3) பிரதான பொறியியலாளர் ஜயந்த களுபோவில (ஹொரணை) 4) இரண்டாம் …

Read More »

ஐ.நா. நிபுணரின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்தும் : ரவிநாத் ஆரியசிங்க

ஐ.நா. நிபுணரின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்தும்

ஐ.நா. நிபுணரின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்தும் : ரவிநாத் ஆரியசிங்க ஸ்ரீ லங்கா மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஐ.நாவுக்கான ஸ்ரீலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சிறுபான்மையினரின் விடயங்கள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா கடந்த வருடம் ஸ்ரீலங்காவிற்கு வருகை …

Read More »