“கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பிச்சையெடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் அவர்களைப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் 18 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் மூலமாக இவர்களைப் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார். “கடந்த மூன்று மாதங்களில் கைதுசெய்யப்பட்ட 18 …
Read More »நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமாக அனர்த்தத்தைப் பயன்படுத்த வேண்டும்! – ஜப்பானியத் தூதுவா் தெரிவிப்பு
அனர்த்தம் ஏற்படும்போது அதனை மேலும் பாதுகாப்பான நெகிழ்திறன் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சந்தா்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும் என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவா் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார். ஜப்பானிய குழு வெள்ளம் மற்றும் மண்சாிவுகளுக்கான காரணத்தை ஆராய்ந்ததுள்ளதோடு, பல திட்டங்களையும் பரிந்துரைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கையின் தென் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சாிவுகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட ஜப்பானிய அனா்த்த நிவாரண நிபுணா் குழு, அதன் …
Read More »வெள்ளம், வறட்சியால் 14 இலட்சம் பேர் பாதிப்பு! – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், மண்சரிவுகளாலும் சுமார் ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள ஏனைய தகவல்கள் வருமாறு:- வடக்கிலும் கிழக்கிலும் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் கடும் …
Read More »ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு நிச்சயம் தேவை.மு.க.ஸ்டாலின்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையர் கேட் கில்மோருக்கு, மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 35–வது கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள …
Read More »அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் .
சென்னை,திருவேற்காட்டில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை குழு இன்றோடு கலைக்கப்படுகிறது. அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More »போயஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்ற தீபா திட்டம்; நாஞ்சில் சம்பத்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்றது குறித்து நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போதும், அ.தி.மு.க. பொது செயலாளராக இருந்த போதும் தீபாவை போயஸ் கார்டனில் அனுமதிக்கவில்லை. அண்ணன் மகள் என்ற உரிமையில் அந்த வீட்டை கைப்பற்ற தீபா திட்டமிடுகிறார். தீபா குடியிருக்கும் வீடே ஜெயலலிதாவின் பெயரில்தான் இருக்கிறது. தீபா இப்படி ஒரு தீமை செய்வார் என்பதை முன்கூட்டியே …
Read More »வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி வழங்க அமெரிக்கா திட்டம்! – கம்மன்பில குற்றச்சாட்டு
“வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி தீர்வைக் கொடுப்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா. இதற்காக திட்டமிட்ட அடிப்படையில் இங்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். “தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இங்கு செயற்கையான பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைச் சில நாடுகள் விரும்புகின்றன. அந்த நாடுகளே சதிசெய்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- …
Read More »ரணிலுடன் இணைந்திருப்பதால் மைத்திரியை வெறுக்கின்றோம்! – மஹிந்த அணி விளக்கம்
“நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதும் அந்தக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதித்திருக்கவேண்டும். அதனுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்ததால் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான். இதனால்தான் எம்மால் மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து செயலாற்றமுடியாமல் உள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் …
Read More »என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது தீபா குற்றச்சாட்டு .
என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று தீபா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. போயஸ் தோட்ட இல்லத்தில் போதிய பாதுகாப்பு இல்லை. தனியாக வருமாறு தீபக் அழைத்தார் தனியாக வர மாட்டேன் என்று மறுத்தேன். தீபக் அழைத்ததாலேயே போயஸ் தோட்ட இல்லம் சென்றேன். வேதா இல்லம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதுபோல …
Read More »வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பேசியே முடிவு என்கிறார் சம்பந்தன்!
“வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துப் பேசவேண்டும். அதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை நாம் எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் …
Read More »