Monday , October 20 2025
Home / செய்திகள் (page 414)

செய்திகள்

News

வளைகுடா நாடுகளில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் – ஈரான் குற்றச்சாட்டு

கத்தார் மீதான தடை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிலவும் சமீபத்திய குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் உச்ச தலைவர் அயடோலா அலி கமேனெய் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் உடன் இருந்த தூதரக உறவுகளை சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 7 நாடுகள் திடீரென முறித்தன. பயங்கரவாதத்திற்கு கத்தார் துணை போவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஈரான் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் …

Read More »

ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் ஆவேச தாக்குதல் நடத்துவோம் – ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலத்தில் மேற்கத்திய நாடுகள், மத்தியகிழக்கு வளைகுடா நாடுகள், ரஷ்யா மற்றும் ஆசியாவிலுள்ள அனைத்து நாடுகளிலும் அதிரடி தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் போவதாக சபதம் ஏற்றுள்ளனர். …

Read More »

தேர்தல் குளறுபடிகளுக்காக உள்கட்சி எம்.பி.க்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று அக்கட்சி எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே மன்னிப்பு கேட்டுள்ளார். பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு …

Read More »

பிரதமரின் தீர்மானங்களால் அதிர்ச்சியில் ஜனாதிபதி மைத்திரி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியில் உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அண்மையில் நடத்தப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது சில முக்கிய தீர்மானங்களை பிரதமரே எடுத்திருப்பதாகவும், அதனால் ஜனாதிபதி அதிருப்தியடைந்திருப்பார் என தாம் நினைப்பதாகவும் அவர் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் …

Read More »

மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் இல்லை – மகிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ‘ஒரு மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்து ஒரு வாரத்துக்குள், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும். மாகாணசபைத் தேர்தலைப் அண்மையில் ஏற்பட்டது போன்ற பாரிய அனர்த்தம் அல்லது பிரபலமான ஆணை அல்லது நீதிமன்ற தீர்ப்பினால் மாத்திரமே பிற்போட முடியும். ஒரு அமைச்சரோ, அல்லது …

Read More »

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?

தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவரின் குற்றச்சாட்டுகள் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியிருந்தது. ஏனைய இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ஈபிஆர்எல்எவ், புளொட், …

Read More »

ஹுசேன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – ஜெனிவாவில் முறையிடப் போகிறாராம் சரத் வீரசேகர

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் உள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர, தற்போது நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாளை ஜெனிவா செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின் …

Read More »

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் – மஸ்தான் எம்.பி வேண்டுகோள்

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம். நாட்டில் முஸ்லிம்களுடைய மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் மஸ்தான் எம்.பியினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களூடாக இனவாதத்தை தூண்டும் வெறுப்புப்பேச்சுக்கள், தகவல்கள் என்பனவற்றை பகிர்வதையும் பதிவு …

Read More »

மகஸின் சிறை, ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடுகளுக்கு கோட்டாவே காரணம்! – தண்டிக்கப்பட வேண்டும் என்று இடதுசாரி நிலையம் வலியுறுத்து

இறுதி யுத்தத்தில்

மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என இடதுசாரி நிலையம் குற்றம்சாட்டியுள்ளது. குற்றமிழைத்தவர்களைவிட குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இடதுசாரி நிலையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா மேலும் கூறியுள்ளதாவது:- “வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு …

Read More »

வொஷிங்டன் செயலமர்வில் கரு, சரா, புத்திக பங்கேற்பு!

ஜனநாயக பங்கேற்றல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பை வலுவூட்டுவதில் நாடாளுமன்றத்தின் வகிபாகம் என்ற தொனிப்பொருளில் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் விசேட செயலமர்வு நேற்று 12 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்தச் செயலமர்வு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த விசேட செயலமர்வில் இலங்கை, டுனீசியா, கொலம்பியா, நேபாளம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். குறித்த நாடுகள் அரசியல் ரீதியான …

Read More »