Monday , October 20 2025
Home / செய்திகள் (page 413)

செய்திகள்

News

சி.வி.க்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம்: மாவை

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு ஆளுநரிடம் கடிதமொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே …

Read More »

ஞானசாரருக்கு பிடியாணை!

பொது பல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலை ஞானசாரர் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தி வந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இன ரீதியான முரண்பாடுகளை …

Read More »

லண்டன் தீ விபத்திற்கு இலங்கை அரசாங்கம் இரங்கல்!

மேற்கு லண்டனில் தொடர்மாடிக் கட்டட தீ விபத்தினால் ஏற்பட்ட பேரழிவிற்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கை அரசின் சார்பில் இரங்கல் வெளியிட்டுள்ளார். 27 மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தானது பேரதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அன்பான உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார். அதேவேளை, காயங்களுக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேற்படி …

Read More »

வடக்கின் 4 அமைச்சர்களையும் ஒரேயடியாக நீக்கினால் விக்கியும் தனது அமைச்சு பொறுப்புகளை துறக்கவேண்டும்! – மாவை வலியுறுத்து 

“வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். வரம்பு மீறிச் செயற்படும் அவரின் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க குற்றவாளிகளான இரு அமைச்சர்களை மட்டும் அவர் பதவிநீக்கம் செய்து புதியவர்களை நியமிக்கவேண்டும். இதைவிடுத்து குற்றவாளிகளுடன் நிரபராதிகளான அமைச்சர்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றினால் அவரும் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடன் துறக்கவேண்டும். புதியவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் …

Read More »

வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: விக்கியுடன் சம்பந்தன் தொலைபேசியில் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில், அவருடன் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தொலைபேசியில் திடீரென உரையாடியுள்ளார். இந்த அவசர உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த உரையாடலின்போது வரம்பு மீறிய வடக்கு …

Read More »

பொதுபலசேனாவை இன்றும் கோட்டாவே இயக்குகின்றார்! – அமைச்சர் எஸ்.பி. குற்றச்சாட்டு

“பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாலூட்டி வளர்த்த கோட்டாபய ராஜபக்ஷவே இன்றும் அந்த அமைப்புக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றார்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இனவாத, மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் குழுக்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாதுகாப்பு வழங்கி அந்த அமைப்பை வளர்த்தெடுத்தவர் முன்னாள் பாதுகாப்புச் …

Read More »

ஞானசார தேரருக்கு அமைச்சர் பாட்டலியே பாதுகாப்பு வழங்கி வருகிறார்! – திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

இலங்கையின் அமைதிக்கு எதிராக இனக் கலவரங்களைத் தூண்டிவிடும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இந்த அரசின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவே பாதுகாப்பு வழங்கி வருகிறார் என லங்கா சமசமாஜ கட்சியின் பிரதம செயலாளரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். ஞானசார தேரருக்கு அமைச்சரொருவர் பாதுகாப்பு வழங்கி வருகின்றார் என ஊடகங்கள் மறைமுகமாக செய்திகளை வெளியிட்டு வந்திருப்பதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே அந்த அமைச்சர் …

Read More »

கடந்த 5 மாதங்களில் 150 பேரின் உயிரைக் காவுகொண்டது டெங்கு!

இலங்கையில் 8 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுகின்ற வேகம் உக்கிரமடைந்துள்ளது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகமாகப் பரவிவருகின்றது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 5 மாதங்களில் 60 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார …

Read More »

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலிலும் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல் சுற்று முடிவில் தெரியவந்துள்ளது. பிரான்சில் கடந்த மாதம் 7-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் என் மார்ச்சே(குடியரசை நோக்கி நகர்வு) என்ற கட்சியின் தலைவரான மேக்ரான் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில் 577 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் முதல் சுற்று தேர்தல் நடந்தது. மொத்தம் 49 …

Read More »

நாவன்லி கைது எதிரொலி: ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேர் கைது

நாவன்லி கைது எதிரொலியால், அவருக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியான அலெக்சி நாவன்லி கடந்த 30 நாட்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் அரசின் ஊழலுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் மாதத்திற்கு பிறகு பெரிய அளவில் நடத்தப்பட்ட போராட்டம் இது என்பது …

Read More »