வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினாலும், சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களாலும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்த்து, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாகப் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. …
Read More »கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு காலதாமதமின்றி கூட்டப்பட வேண்டும்: ரெலோ வலியுறுத்தல்
வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுமூகமான தீர்வை எட்டும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காலதாமதமின்றி உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் ரெலோ அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுத்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் …
Read More »குற்றவாளிகளை காப்பாற்றும் வடக்கு முதல்வரின் தீர்மானத்தை ஏற்க முடியாது: சுமந்திரன்
வடக்கு முதல்வர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தமையாலேயே அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தமிழரசு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதல்வர் சி.வி.க்கு எதிராக தமிழரசு கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் இரு அமைச்சர்கள் மட்டுமே குற்றவாளிகள் எனவும் ஏனைய …
Read More »இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்
இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் எல்லைத்தாண்டக்கூடாது என்ற கடும் நிபந்தனைக்கு அமையவே படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 2015ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட 42 படகுகள் விடுவிக்கப்படவுள்ளன. கைப்பற்றப்பட்ட காலத்தின் அடிப்படையில் ஏனைய படகுகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் கடற்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
Read More »மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராகிறார் அருட்பணி ஜெபரட்ணம்
மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி அறிவித்தலை வத்திகானிலுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் ஆயராக அருட்பணி ஆற்றிவந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை சுகயீனம் காரணமாக ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதனை அடுத்து மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மறை மாவட்டத்தின் அப்போஸ்தலிக்க …
Read More »அயர்லாந்தின் இளம் பிரதமராக இந்திய வம்சாவளி மருத்துவர் தேர்வு
அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி பதவி விலகியதை அடுத்து ஆளும் கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் லியோ வரத்கர் அயர்லாந்தின் பிரதமராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் லியோ வரத்கர் அயர்லாந்தின் இளம் பிரதமராக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அயர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அயர்லாந்தின் பிரதமராகும் வாய்ப்பினை வரத்கர் பெற்றார். 38 வயதாகும் …
Read More »ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை: 22 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவம் தொடர்ந்து கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க கூட்டுப்படைகளும், ஈராக் ராணுவத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு மாகாணமான தியாலா, வட மத்தி மாகாணமான சலாகுதீன் ஆகியவற்றின் எல்லையில் உள்ள மெட்டிபிஜா பகுதியில் பதுங்கி இருந்த …
Read More »பனாமா லீக்ஸ் விவகாரம்: புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஆஜரானார் நவாஸ் ஷெரீப்
பனாமா லீக்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கோர்ட் அமைத்த கூட்டு புலனாய்வுக்குழு முன்பு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று விசாரணைக்கு ஆஜரானார். பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் வரிஏய்ப்பு செய்வதற்காக பல்வேறு நாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது. பனாமா கேட்’ என …
Read More »சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்பு- பிரித்தானியா எச்சரிக்கை
சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம், தமது நாட்டு குடிமக்களுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது. சிறிலங்காவில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய பிரித்தானிய அரசின் மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2009 மே மாதம், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்தன. 2011 இல் அவசரகாலச்சட்ட விதிகள் தளர்த்தப்பட்டன. …
Read More »தமிழரசுக் கட்சிக்கு எதிராக அணிதிரளுங்கள்: கஜேந்திரகுமார்
வடக்கு மாகாண முதலமைச்சரை, பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி செயற்படுவதனைத் தடுக்க, தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக …
Read More »