Monday , October 20 2025
Home / செய்திகள் (page 409)

செய்திகள்

News

பிரதமர் தலைமையில் ஜெனீவா பிரேரணை அமுலாக்கக் குழு

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்தும் அமுலாக்கக் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக்கப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் …

Read More »

உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை

உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை.சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய 2017ஆம் வருடத்திற்கான தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவை 81 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் முதலாவது இடத்தையும்,சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும்,மூன்றாவது இடத்தை ஜப்பான் ஓல் நிபொன் விமான சேவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தரப்படுத்தலில் கடந்த வருடம் இலங்கை 67 ஆவது …

Read More »

பிரான்ஸ்: எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக நியமித்தார் அதிபர் மெக்ரான்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி …

Read More »

டிரம்பை ஒருபோதும் காதலிக்கவில்லை: பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு

‘டிரம்பை ஒருபோதும் நான் காதலிக்கவில்லை’ என பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவியும், மாடல் அழகியுமான கர்லா புரூனி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி (49). இவர் முன்னாள் மாடல் அழகி. பிரபல பாடகியாகவும் திகழ்ந்தார். இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இவர் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அவரது 2-வது மனைவி மார்லா மாப்பில்ஸ் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்ததாகவும் …

Read More »

கோமாவில் இருந்த மாணவன் மரணம்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம்

வடகொரியாவால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கோமா நிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரின் மரணத்துக்கு வடகொரியாவை குற்றம்சாட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு …

Read More »

ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிட முயற்சி: வாசுதேவ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனவாத கலவரங்களை நாட்டில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் இன்று இனவாத கலவரங்களோ முரண்பாடுகளோ …

Read More »

அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்து!

கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் …

Read More »

திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்று வரும் தனது புதல்வியை பார்க்க செல்ல அனுமதி வழங்குமாறு …

Read More »

வடக்கு மாகாணசபையின் ஒற்றுமை கூட்டமைப்பை பலப்படுத்தும்: யோகேஸ்வரன்

வடக்கு மாகாணசபையில் நியாயம் நீதி நிலைக்கவேண்டும், அங்கு ஏற்படும் ஒற்றுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,”கிழக்கு மாகாணத்தில் பல நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. விசாரணைகள் நடத்தப்படவில்லை. முதலமைச்சர் மாநாடு நடத்தியதில் …

Read More »

கடந்த இரண்டாண்டுகளாக இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது குறைந்துவிட்டது: ஸ்விஸ் வங்கிகள்

கடந்த இரு ஆண்டுகளில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக ஸ்விச்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக ஸ்விச்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் தங்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் …

Read More »