Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 220)

செய்திகள்

News

ஜெயலலிதா சிகிச்சை ; சிசிடிவி நிறுத்தப்பட்டது – அப்போலோ பிரதாப் ரெட்டி தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிசிடிவி கேமரா பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என அப்போலோ நிறுவன தலைவர் பிரதார் ரெட்டி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அந்நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. …

Read More »

கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரினோம்- சுமந்திரன்

ஜெனிவாவில் இன்றைய சிறிலங்கா தொடர்பான அமர்வின் போது, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பதில் பிரதித் தூதுவர் கெல்லி கியூரியையும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் …

Read More »

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம்

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விவாதத்தின் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்கியூலி, “அவர்களுக்காக நாங்கள் நாட்டை நடத்தவில்லை. ஆனால், வரலாற்று ரீதியான …

Read More »

மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக சகல தரப்புக்களுடனும் இணைந்து வினைத்திறனாக பணியாற்றத் தயார் – இலங்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் பூகோள காலாந்தர மீளாய்வு அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த செயற்பாட்டுக்காக இலங்கை உறுதியான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க தெரிவித்தார். உள்நாட்டு – வெளிநாட்டு ரீதியில் மனித உரிமைகளை மேம்படுத்தும் போதுஇ ஐக்கிய நாடுகள் சபைஇ முறையான நடவடிக்கைகள் என்பனவற்றுடன் தனி அரசுகளுடனும் வினைத்திறனான முறையில் பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. கடந்த …

Read More »

நாட்டின் பொருளாதாரம் தெளிவான வளர்ச்சியில் : மத்திய வங்கியின் ஆளுநர்

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் தெளிவான வளர்ச்சியை எட்டியுள்ளது – இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். கொழும்ரில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ~~நாட்டின் நிதி உள்ளடகத்தை அதிகரிக்க மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு அதற்கான வசதிகளை …

Read More »

மறைந்த கணவரை காண தஞ்சை வந்தடைந்தார் சசிகலா..

மறைந்த தனது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பரோல் கிடைத்த சசிகலா சிறையிலிருந்து புறப்பட்டு தற்போது தஞ்சைக்கு வந்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது. இதையடுத்து, மதியம் சிறையில் இருந்து …

Read More »

ஜனாதிபதியின் உயிரை காப்பாற்றிய தமிழ் மக்கள் : கருணாகரம்

தமிழ் பேசும் மக்கள் தனது உயிரை காப்பாற்றியுள்ளனர் என ஜனாதிபதி கூறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அபிவிருத்திக்கு அப்பால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக இன்றுவரையில் போராடிக்கொண்டுள்ளது. 2001ஆம் ஆண்டு தமிழர்களின் ஒருமித்த …

Read More »

அப்பாடா தலைவர் வாயை திறந்துவிட்டாரா! ரஜினி இப்போவது பேசினாரே

சில நாட்களுக்கு முன் இமயமலை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பிவிட்டார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அவரது போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இமயமலை பயணம் புத்துணர்வு அளிக்கிறது. இனி 16 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வது நடக்கும். புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டு மிராண்டத்தனமானது. ரதயாத்திரையின் போது மத கலவரத்திற்கு …

Read More »

சிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் இரசிக்கிறது

கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை, பெரும்பாலான சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும், அதில் எவ்வித உண்மையும் இல்லை. 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போதும் பெருமளவான சிங்களவர்கள் மகிழ்ச்சியுற்றனர். அரேபிய கலாசாரத்தை சில …

Read More »

புட்டினுக்கு மைத்திரியும் மஹிந்தவும் வாழ்த்து

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புட்டினுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புட்டினின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும. அதன்மூலம் ரஷ்ய மக்கள் தமது இலக்கை அடைந்துகொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, …

Read More »