Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக சகல தரப்புக்களுடனும் இணைந்து வினைத்திறனாக பணியாற்றத் தயார் – இலங்கை

மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக சகல தரப்புக்களுடனும் இணைந்து வினைத்திறனாக பணியாற்றத் தயார் – இலங்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் பூகோள காலாந்தர மீளாய்வு அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த செயற்பாட்டுக்காக இலங்கை உறுதியான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க தெரிவித்தார்.

உள்நாட்டு – வெளிநாட்டு ரீதியில் மனித உரிமைகளை மேம்படுத்தும் போதுஇ ஐக்கிய நாடுகள் சபைஇ முறையான நடவடிக்கைகள் என்பனவற்றுடன் தனி அரசுகளுடனும் வினைத்திறனான முறையில் பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் இலங்கைக்குக் கிடைத்த 253 பரிந்துரைகளுள் 177 பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் தன்னார்வமாக வழங்கப்பட்ட 12 உறுதி மொழிகளும் காணப்படுகின்றன. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டமும் அமுலாகிறது.

ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உறுதிமொழிகளை தேசிய மட்டத்தில் அமுல்படுத்தத் தேவையான சட்டக் கட்டமைப்பும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உள்ளுராட்சி மன்றகளுக்கான பெண் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை 25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரவிநாத்த ஆரியசிங்க தெரிவித்தார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …