2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு போட்டியிட முடியாததால், நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே அவ்வணியினர் காய்நகர்த்தி வருகின்றனரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நாட்டில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்களிடம் நம்பிக்கையற்று போனவர்களே இன்று பிரதமருக்கு எதிராக …
Read More »அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை கருனை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள்
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் ஜனாதிபதிக்கு கோரிக்கையை விடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். -இந்த நிலையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று(26) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். …
Read More »வடகொரிய அதிபர் சீனாவிற்கு ரகசிய பயணம்?
வடகொரிய அதிபர் கிம் சீனாவிற்கு சென்றுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால் இந்த சந்திப்பின் பின்னணியில் உள்ள ரகசியங்களும் வெளியே வரும். வடகொரியாவின் அதிபர் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருகை தந்துள்ளதாகவும், இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது குறித்து வடகொரிய தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை கிம்மின் …
Read More »மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசு அதிரடி முடிவு
வரும் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு 6 வாரத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உச்ச நீதிமன்ற கொடுத்த காலக்கெடு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. தமிழக அரசு மற்றிம் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய …
Read More »நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்து இதுதான்: கமல்ஹாசன்
திரையுலகில் இருந்து முதல்வர் கனவுடன் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்களிடையான உரையாடலில் தான் முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து குறித்து குறிப்பிட்டுள்ளார். பொன்னேரி அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று மாணவர்களிடையே உரையாடிய கமல், மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், ‘நீங்கள் முதல்வரானது போடும் முதல் கையெழுத்து எது? என்று கேட்டபோது, ‘லோக் ஆயுக்தா’ என்று பதிலளித்தார். இதே …
Read More »மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் பல மீட்பு
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து –மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று திங்கட்கிழமை(26) காலை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் …
Read More »நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
நீதிமன்றம் தடை விதித்த பின்னும் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் திருமணம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. சசிகலாவும், ஜெயலலிதாவும் தன்னை அடித்து விட்டதாக பாராளுமன்றத்தில் புகார் பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. அதனால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அவரின் பெயரில் விருப்ப மனு கொடுக்க வந்த அவரின் கணவரை அதிமுகவின் …
Read More »பிரதமர் பதவியை துறக்க வேண்டும் ; இராஜதந்திரிகளும் அழுத்தம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளால் நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கி நகர்கிறது. அதனை கருத்திற் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென இராஜதந்திரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் அறிய முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் புதிய பிரதமர் ஒருவரை நியமித்து ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும்வரை நாட்டை ஸ்திரமாக கொண்டுசெல்லுமாறும் பிரதமருக்கு இராஜதந்திரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். …
Read More »ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அனைத்து எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகவேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும்இ மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பிரதமர் உட்பட ஐ.தே.கவிலுள்ள மூத்த அமைச்சர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீது …
Read More »பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு மலையக தலைமைகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுயான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் சிறுபான்மை மக்கள் இந்த …
Read More »