சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.நாடாளுமன்றக் குழப்பங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த …
Read More »பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகள்?
எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சி மௌனம் காத்து வருகிறது.ஜெனிவாவில் வரும் திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக முழு அடைப்பு போராட்டம் …
Read More »கொழும்பில் அதிரடியாக களமிறங்கிய அதிரடி படையினர்…..
இரு வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளஎதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் ரத்கம நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடிபடையினர் களமிறகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சம்பவ இடத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதேச மக்களினால் காலை 10 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக காலி கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Read More »மைத்திரி-மஹிந்த பேச்சுவார்த்தையில் பசில் புறக்கணிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜக்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பசில் ராஜபக்ஷ இடம்பெறாதமைக்கு ஸ்ரீ.ல.சு.க. விளக்கமளித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் ஏன் கலந்துகொள்ளவில்லையென தன்னால் கூற முடியாது எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். …
Read More »நாடு முழுவதும் 3711 பேர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய குறித்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »விஜய்காந்த், ரஜினிகாந்த் சந்திப்பு பின்னணி என்ன?
ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அப்படியிருக்க சமீபத்தில் இவர் விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து பல பேச்சுக்கள் எழுந்தது, இதற்கு ரஜினியே முற்றிப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசியுள்ளார். இதில் ’நண்பர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை’ என்று கூறியுள்ளார். https://twitter.com/CinemaCalendar/status/1098833413677568000
Read More »பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் மே மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கு எதிரான வழக்கின் மனு மீதான விசாரணை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் …
Read More »தமிழர்களின் இனப்படுகொலை குறித்து மனோ வெளியிட்ட அறிவிப்பு
தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினை மறக்க முடியாதென்றும், மன்னிப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிக்க முடியுமென இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் மனோ கணேசன் இதனை …
Read More »இறுதி யுத்தத்தில் ராணுவ வீரர்கள் செயல் குறித்து மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு
இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பபோவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஊடகமொன்று போர்க்குற்ற விசாரணை குறித்து கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“இராணுவத்தினர் குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்தவர்கள். ஆகையால் அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஆனாலும், இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று யாரும் …
Read More »முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழ் புலியாம் ஞானசார தேரர்
நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் …
Read More »