Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா-தம்பி பலி

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா-தம்பி பலி

சிவகங்கை அருகே நடந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு வனிதா என்ற மகளும், அகிலன் என்ற மகனும் இருந்தனர். வனிதா 10-ஆம் வகுப்பும், அகிலன் 9-ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

அகிலாவிற்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்குவதால் அவருக்கு பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் வகுப்பு நடைபெற்று வந்தது. சம்பவத்தன்று வனிதாவை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது தாய் லட்சுமியும், தம்பி அகிலனும் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றனர்.

பின் அகிலாவை அழைத்துக் கொண்டு மூன்று பேருமாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்களின் இரு சக்கர வாகனத்தில் மீது மோதியது. இந்த விபத்தில் வனிதா மற்றும் அகிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த அவர்களின் தாய் லட்சுமியை மீட்டு மருத்துவமைனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …