கமல்ஹாசன் சமீபகாலமாக சினிமாவை தாண்டி மக்களின் நலனை நோக்கி நகர தொடங்கியுள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது தமிழக அரசியலை பற்றியும் தன்னுடைய பார்வைகளை ட்வீட் செய்து வந்தார், விரைவில் அவர் அரசியல் காட்சி தொடங்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.
இந்நிலையில் இன்று பலத்த மழை காரணமாக கொடுங்கையுூரில் இரண்டு பிஞ்சு குழந்தைகள் மீன் கம்பியில் கால்வைத்து இறந்துள்ளனர். இது தமிழக அரசின் அலட்சிய போக்கு என்று மக்கள் குறை கூறி வருகின்றனர். இதை பற்றி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் “கொடுங்கையுூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும் என்று ட்வீட் செய்துள்ளார்.
கொடுங்கையுூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும்
— Kamal Haasan (@ikamalhaasan) 1 novembre 2017