தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 ஆவது வீர மக்கள் தினம் கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில், அதன் நிர்வாகச் செயலாளர் எம். பத்மநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் கே. உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் …
Read More »போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் …
Read More »7 நாடுகளின் பயணிகளின் விசாவை உன்னிப்பாக கண்காணிக்க இலங்கை தீர்மானம்
பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கருத்தில் கொண்டே இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரிகோஸ்ட், கானா, நைஜீரியா, கமரூன் ஆகிய ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு நுழை விசைவு வழங்கப்படுவதற்கு முன்னர், முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும். ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக சிரியா …
Read More »அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்
அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை …
Read More »தேர்தல் தோல்வியை அறிந்ததும் கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பெண் பிரதமர்
தேர்தல் முடிவு எதிர் மறையாக வந்தபோது அதை தாங்கி கொள்ள முடியாமல் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்ணீர் விட்டு கதறி அழுதார். இங்கிலாந்தில் கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 2 ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் தெரசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்தினார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூடுதல் மெஜாரிட்டியுடன் தெரசா மே ஆட்சியை பிடிப்பார் என்று முடிவு வெளியானது. ஆனால் எதிர்பார்த்தது போன்று …
Read More »மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு
சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு புற்றுநோயால் மரணமடைந்த மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா தூதரகம் அனுமதி மறுத்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு ஆம்ஸ்டர்டாம்: சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு …
Read More »பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி
பங்களாதேஷிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹஸீனா இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இரு தலைவர்களுக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையில் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
Read More »முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல்
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பி.தஸநாயக்கவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க கைது செய்யப்பட்டார். அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 19ஆம் திகதி …
Read More »முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீளாய்வு செய்ய உத்தரவு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் நடத்துவதற்கு அனுமதித்து முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை …
Read More »ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை நிஜமாக்கிய ஓவியர் வீரசந்தானத்திற்கு அஞ்சலி
தஞ்சை ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்னும் ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றிய மறைந்த, ஓவியர் வீரசந்தானத்திற்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகத் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுவந்த நிலையில் சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்தார். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடிய இவர், ஆயுத விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதிலும் மிகவும் …
Read More »