Monday , October 20 2025
Home / தமிழ்மாறன் (page 106)

தமிழ்மாறன்

போரின் போர்வையில் நடந்த பொதுமக்களின் கொலைகளை பொறுத்துக்கொள்ள முடியாது – சந்திரிகா

போரில் ஈடுபட்ட போர்வையில், அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த எவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பொறிமுறை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். பலாலியில் உள்ள யாழ்ப்பாண படைகளின் தலைமையகத்தில் கடந்த மார்ச் 25ஆம் நாள், மாலையில் சிறிலங்கா படை அதிகாரிகள், மற்றும் படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய அமைதி மற்றும் …

Read More »

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது : கோட்டா

நல்லிணக்கத்தை போர்க்குற்ற விசாரணைகள் ஒருபோதும் தோற்றுவிக்காது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளையும், விசாரணைகளையும் ஒரே நேரத்தில் கொண்ட வருவதன் மூலம் இலங்கை வாழ் சமூகங்களை இணைக்க முடிõது. அவ்வாறு செய்ய நினைத்தால், அனைவருக்குமான நல்லிணக்கமாக அது இருக்காது. போருக்குப் பின்னர், எம்மால் என்ன செய்ய முடியும்? பின்னால் …

Read More »

சவூதி அரேபியாவில் மலையகப் பெண் கொலை

மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற ஹட்டன் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்துள்ளார். இவரின் உடல் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் அவர்களின் உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த இப்பெண் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (வயது 41) மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரியவந்துள்ளது. இந்த பெண் மஸ்கெலியாவிலிருந்து தனது …

Read More »

பட்டதாரிகளின் பிரச்சனை : ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க விக்னேஸ்வரன் தீர்மானம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தீர்வு எட்டப்பாடும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடங்களை வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 29 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க …

Read More »

ஸ்ரீலங்காவிற்கு எதிராக சதிவலை ; உதய கம்மன்பில

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சமஷ்டித் தீர்வுக்கான அரசமைப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற அபாயகரமான உள்நோக்கத்தோடு தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு இரண்டு வருடக்கால அவகாசம் வழங்கப்பட்டதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான தகவல்களை 8 வருடங்களுக்கும் மேலாக மறைத்த குற்றத்துக்காக …

Read More »

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு

2016 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை (28) வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் நாளை பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்புகுமார குறிப்பிட்டார். 2016 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக சுமார் ஏழு இலட்சம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More »

சாட்சியை கோரும் இராணுவம்; உறவுகள் கவலை

இராணுவத்தின் கையில் கொடுத்த தமது பிள்ளைகள் தொடர்பில் விசாரணைக்காக செல்லும்போது உங்கள் பிள்ளையை இராணுவத்திடம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதா? என கேட்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தின் கையில் கொடுத்து விட்டே தாம் நலன்புரி நிலையங்களுக்கு சென்று தமது பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் போராட்டம் இன்றுடன் இருபத்தோராவது நாளை எட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட …

Read More »

ஸ்ரீலங்கா உள்ளிட்ட16 நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியா

ஸ்ரீலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இந்த ஆண்டில் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக, இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ‘இருதரப்பு பாதுகாப்பு உறவுகளையும் ஒத்துழைப்புக்களையும் வலுப்படுத்தும் நோக்கில் 2017ஆம் ஆண்டில் 16 நாடுகளுடன் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், சீனா, பிரான்ஸ், இந்தோனேசியா, கஸகஸ்தான், …

Read More »

வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 டெங்கு நோயாளர்கள்

வவுனியாவில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 100 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தினை அடுத்து வீதியோரங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவுடன் நகரசபை ஊழியர்கள் …

Read More »

போராட்டத்திற்கு உரிய தீர்வு இன்றேல் வீச்சு அதிகரிக்கும் : கேப்பாபுலவில் துரைராசா

சொந்த நிலங்களிற்கு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் போராட்டத்தின் வீச்சு அதிகரிக்கும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களை நேற்றையதினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் இருபத்தேழாவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் …

Read More »