ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளை போன நாணயம் கனடா அரசால் …
Read More »ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 15 நாள் சிறை தண்டனை
ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவில் ஊழல் மலிந்து விட்டதால், பிரதமர் பதவியில் இருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடைபெற்றது. தலைநகர் மாஸ்கோவில் நடந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி தலைமை தாங்கினார். போராட்டங்களில் ஏராளமானோர் திரளாக கலந்து …
Read More »ஈரான் நாட்டிற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் கொலை மிரட்டல் வீடியோ
ஈரான் நாட்டிற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் கொலை மிரட்டல் வீடியோ ஒன்றினை அனுப்பியுள்ளனர். ஈரான் நாட்டில் ஷியாட் முஸ்லீம்கள் அதிக அளவில் காணப்படுகிறனர். சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ், அமைப்பினர் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாடிக்குள் வைத்துள்ளனர். இந்நிலையில், ஈரான் நாட்டிற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் கொலை மிரட்டல் வீடியோ ஒன்றினை அனுப்பியுள்ளனர். அது 36 நிமிட வீடியோ. அதற்கு,”த பார்சி லேண்ட்: நேற்று முதல் இன்று வரை” என்று …
Read More »ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் – தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் தயாராக இருப்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது. இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான். பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலாகவே நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுக்கு பணம் …
Read More »தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தியது
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தி உள்ளது. இதன் மூலம் அக்டோபர் 20-ந்தேதிக்கு முன் வாங்கிய நிலத்தை பதிவு செய்யலாம். சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். ‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக வீட்டு மனையாக மாற்றப்படுகிறது. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருகின்றன. விவசாய நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க சட்டப்படி அனுமதி …
Read More »மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா தேர்தல் வாக்குறுதி
‘மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்’ என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா கோட்டையில் சுதந்திர …
Read More »நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுகிறார்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில் பங்கேற்க செல்ல இருந்தார். அவரது இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் கூறினர். …
Read More »ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு கொடுத்தனர். ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இங்கு அ.தி.மு.க. இரு அணிகளாக போட்டியிடுகிறது. சசிகலா அணியின் சார்பாக டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக ஓ.பி.எஸ்.அணியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். …
Read More »மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் – போப் பிரான்சிஸ் ஒப்புதல்
மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சிக்கு அருகிலுள்ள புல்லுவழி என்ற ஊரில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார். 1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்டார். 1980-ல் கன்னியாஸ்திரியான இவர், 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற …
Read More »எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா போரை சந்திக்கும் – ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்
முன்பு போல் இல்லாமல் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தியா போர்களை சந்திக்கும் என ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவம் சார்ந்த அறிக்கை தொகுப்பு வெளியீட்டு விழாவில் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது ராணுவ வடிவமைப்பு பிரிவின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் இரண்டாவது தொகுப்புகளை வெளியிட்டு பேசிய அவர் ,” முன்பு போல் இல்லாமல் வரும் காலங்களில் …
Read More »