Thursday , November 21 2024
Home / குமார் (page 23)

குமார்

இந்தியா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்: ரஷிய பிரதமர் புதினுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆறுதல்

இந்தியா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என, ரஷிய பிரதமர் புதினுக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடிதம் மூலம் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்த படியாக 2-வது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று ஒரு மெட்ரோ ரெயிலில் குண்டு வெடித்ததில் 2 பெட்டிகள் கடும் சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். …

Read More »

எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது: நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு கடும் எச்சரிக்கை

எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது.இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி …

Read More »

சிரியாவில் அரசு தரப்பு ராணுவம் நடத்திய வான்வெளி விஷ வாயு தாக்குதல்: 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் …

Read More »

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக பலி

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் கெய்ட்லின் நெல்சன் (20) என்பவர் படித்து வந்தார். அந்த் அக்ல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது, அதில் கெய்ட்லின் கலந்துகொண்டார். போட்டியின்போது, 4 துண்டு கேக்குளை இவர் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உணவு ஒவ்வாமையால் …

Read More »

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் வெடி குண்டு வெடித்தத சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக 14 ஆக உயர்வு

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் வெடி குண்டு வெடித்தத சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ரஷியாவில், தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள இரண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 மெட்ரோ ரெயில் பெட்டிகளில் நேற்று குண்டுகள் வெடித்தன. கேட்பார் இன்றி கிடந்த பொருட்களில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த குண்டு …

Read More »

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை – மு.க.ஸ்டாலின்

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க …

Read More »

கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் – விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது: நீதிபதிகள் அறிவுறுத்தல்

கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் உள்ளதால் விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய சிறு-குறு கடன்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூன் 28-ந்தேதி தமிழ் நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அர சாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக் …

Read More »

ஆர்.கே.நகர் தொகுதி – ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நாளை சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் நாளை கட்சிகளின் சின்னம் பொருத்தும்பணி நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான 2-ம் கட்ட பயிற்சி புதுவண்ணாரப்பேட்டையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கலந்து கொண்டு பயிற்சியை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் 1635 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தேர்தல் கமி‌ஷன் …

Read More »

விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டம், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரோணித் கிருஷ்வான்; விழுப்புரம் மாவட்டம், தடாகம் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் ராஜவேல்; திருவள்ளூர் மாவட்டம், பெரியகளட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் வினித் மற்றும் பிளேஸ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த …

Read More »

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் -மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீனவர் சங்கத்தலைவர்கள் போஸ், தேவதாஸ், ஜேசு, எமரிட், சகாயம் ஆகியோர் இன்று மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பின் மீனவர் சங்கத்தலைவர்கள் கூறியதாவது:- வருகிற 7-ந் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை சென்று …

Read More »