ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டாயிரம் ராணுவ மையங்களை, நவீனப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 58 ராணுவ மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து மையங்களும் நவீனப்படுத்தப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி டெல்லியில் தொடங்கிய ராணுவ மாநாட்டில், விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மாநிலங்களுடன் தகவல் பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும், ராணுவத்தின் உள்கட்டுமானத்தை ஊக்கப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் …
Read More »விஜயுடன் மெர்சல் படத்தை பார்த்த கமல்..!
மெர்சல் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனை, நடிகர் விஜய் சந்தித்துள்ளார். விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். இது தொடர்பான புகைப்படங்களை மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கும்போது, உடன் இருந்தது வாழ்வின் முக்கிய தருணம் என குறிப்பிட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தவறான தகவல்களையும் …
Read More »தனிநாடு அறிவிப்பை வெளியிடாமல் தடுக்க ஸ்பெயின் அரசு அவசர ஆலோசனை!
கேட்டலோனியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மக்களில் பெரும்பாலானோர் ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாக ஆக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கேட்டலோனியா மாநில அரசு விடுதலை அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ள அதேநேரத்தில் ஸ்பெயின் அரசு கேட்டலோனிய ஆட்சியைக் கலைத்துவிட்டுப் புதிதாகத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. நெருக்கடியான காலக்கட்டத்தில் இதுபற்றி விவாதிப்பதற்காக மாட்ரிட்டில் ஸ்பெயின் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைப் பிரதமர் மரியானோ ரஜோய் கூட்டியுள்ளார். கேட்டலோனியா ஆட்சியைக் கலைக்கும் அரசின் முடிவுக்கு …
Read More »ரஜினி மெர்சலுக்காக பேசமாட்டார்; போர் வரும்போதுதான் பேசுவார் – சீமான்
மெர்சல் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசமாட்டார் என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர் வரும்போது மட்டுமே ரஜினி பேசுவார் என விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர், கட்டண விலை உயர்வால் மக்கள் திரையரங்கில் படம் பார்க்கும் நிலை இல்லை என்றும் கூறினார். இனிமேல் எல்லாரும் இணைய தளத்தில்தான் படம் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் கூறினார். ராஜேந்திர …
Read More »ஜேர்மனியில் மர்ம நபர் கத்தித் தாக்குதல்
ஜேர்மனியின் தென் பிராந்திய நகரான முனிச்சில், நபரொருவர் கத்தியால் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். எனினும், தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்தனர். திடீரென நடத்தப்பட்ட இத்தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சைக்கிளில் தப்பியோடிய தாக்குதல்தாரியைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். எனினும், தாக்குதல்கள் வேறு எவராலும் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தினால், அப்பகுதி மக்கள் வீடுகளையும், கட்டடங்களையும் விட்டு …
Read More »டெங்கு: ஒரே நாளில் 5 பேர் பலி!
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் இன்று ஒரே நாளில் இரண்டரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தருமபுரி ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரசுதன் டெங்கு காய்ச்சலால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல காய்ச்சலுக்கு ராமநாதபுரம் மாவட்டம் அரியனேந்தலில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. …
Read More »சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
மெர்சல்’ தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘சங்கமித்ரா’ படத்தின் டைட்டில் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்து பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் ‘சங்கமித்ரா’ டைட்டில் கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது பாலிவுட் நடிகை திஷாபடானி இந்த படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இயக்குனர் சுந்தர் சி மனைவி குஷ்பு …
Read More »இசையமைப்பாளரைக் கண்டுகொள்ளாத ஒல்லி நடிகர்
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஒல்லி நடிகர், அதில் ஹீரோவாக நடித்துள்ள இசையமைப்பாளரைப் பற்றிக் குறிப்பிடாதது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது ஒருகாலத்தில் ஒண்ணுமண்ணாக இருந்தவர்கள் பிரகாச இசையமைப்பாளரும், ஒல்லி நடிகரும். இருவருக்கும் இடையில் ஏதேதோ காரணங்களால் சண்டை மூள, அவரைவிட்டு விலகி தன் மனைவியின் உறவினரான ஒல்லியை இசையமைப்பாளராக ஆக்கினார் ஒல்லி நடிகர். ஒல்லி இசையமைப்பாளருக்கும், நடிகருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு, அவரிடம் இருந்து விலகியிருப்பது தனிக்கதை. ஒல்லி நடிகரிடம் ஏற்பட்ட …
Read More »மலையாள நடிகையிடம் காதலில் விழுந்தாரா தளபதி இயக்குநர்?
தளபதி இயக்குநர், இரண்டாவதாகவும் மலையாள நடிகையிடம் காதலில் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது. தன் படத்தில் ஹீரோயினாக நடித்த மலையாளத்தைச் சேர்ந்த ‘மில்க்’ நடிகையைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தளபதி பெயரைக் கொண்ட இயக்குநர். ஒரு வருடத்திற்குள்ளேயே கல்யாண வாழ்க்கை கசந்துவிட, விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இயக்குநர் தற்போது இயக்கிவரும் படத்தில், மலர் டீச்சராகப் புகழ்பெற்ற மலையாள நடிகைதான் ஹீரோயினாக நடித்து வருகிறார். அபார்ஷனைப் பற்றிய இந்தப் …
Read More »ரூ.1 லட்சம் மட்டும் சம்பளம் வாங்க தயாரா? விஜய்க்கு மருத்துவ சங்கம் கேள்வி
இளையதளபதி விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி வசன பிரச்சனைகளுக்கே பதில் சொல்ல முடியாமல் மெளனம் காத்து வரும் படக்குழுவினர் தற்போது டாக்டர்கள் சங்கத்தின் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ‘மெர்சல்’ படத்தில் மருத்துவம் என்பது வியாபரம் இல்லை சேவை என்ற வசனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவிசங்கர், ‘நடிகர் விஜய் ரூ.1 லட்சம் மட்டும் சம்பளமாக வாங்கிக்கொண்டு சினிமாவில் நடித்தால் நாங்களும் ரூ.5க்கு மருத்துவம் பார்க்க …
Read More »