“உயிரிழந்த தந்தை குறித்து எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளைதானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா? அப்பா வர நாங்கள் பாக்குக்கு போவோம் என்று அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது?” என, சுனித்ரா எழுதிய கடிதம் …
Read More »உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் துஷார தலுவத்தைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரை துஷார தலுவத்தை தாக்கியிருந்தார். இது குறித்த காட்சிகள் ஊடகங்களில் பரவியதையடுத்து அவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இடமாற்றம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை என்பனவற்றுக்கு முகங்கொடுத்திருந்த அவர் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது.
Read More »இன்றைய ராசிபலன் 28.10.2017
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது …
Read More »நடிகை அசின், பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.
மலையாள நடிகையான அசின், ‘எம் குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ள அசின், நிறைய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ‘கஜினி’ படத்தின் மூலம் ஹிந்திக்குப் போன அசின், அங்கேயே செட்டிலாகிவிட்டார். அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் அசின். நேற்று இரவு குழந்தை பிறந்துள்ளது
Read More »இன்றைய ராசிபலன் 27.10.2017
மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் …
Read More »மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் குறித்து விரைந்து வந்த 17 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் ரெயில் சேவை பாதிப்பு இல்லை என்ற கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »நவம்பர் 7-ந்தேதி கட்சி அறிவிப்பு இல்லை
கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுடனும் தன்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக சில ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என வார இதழ் ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நவம்பர் 7-ந்தேதி கட்சி …
Read More »இந்தோனேஷியாவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து
ஜகார்த்தாவிற்கு வெளியே செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து நேரிட்டது. தீ விபத்தை அடுத்து அங்கிருந்த வெடிகள், வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியது, தீப்பற்றி எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் உருவாகியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் …
Read More »ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் மீட்பு
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலென கெடுமவத்த பகுதியில் 7 வெற்று தோட்டாக்களை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர் கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்ஸிற்காக நின்றுக்கொண்டிருந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொலித்தீன் பையை பார்க்கும் பொழுது அதில் தோட்டாக்கள் இருந்ததை கண்டு உடனடியாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு …
Read More »தமிழக ஆளுனருடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு
சமீபத்தில் தமிழக ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் சமீபத்தில் ‘மெர்சல் படத்தால் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அதன் பின்னர் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச்.ராஜா, ஆளுனருடன் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் ஏற்படும் நிகழ்வுகளை …
Read More »