Sunday , August 24 2025
Home / தமிழவன் (page 121)

தமிழவன்

தொடர்ச்சியாக ஏழு தொடர்கள் வெற்றி: இந்திய அணி சாதனை

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக ஏழு ஒருநாள் தொடர்களை வென்று சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னர் தொடர்ச்சியாக ஏழு முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாவே அணிக்கு எதிராக 3-0 என்ற புள்ளிக்கணக்கிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-2 என்ற புள்ளிக்கணக்கிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற புள்ளிக்கணக்கிலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3-1 என்ற புள்ளிக்கணக்கிலும், இலங்கை அணிக்கு …

Read More »

திருமண விழாவில் பங்கேற்கிறார் கருணாநிதி

உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சுவாசப் பிரச்னை காரணமாக அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த …

Read More »

316 புதிய மருத்துவர்கள் நியமனம்…

அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில், 316 மருத்துவர்களுக்கான பணி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்படுள்ள மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் …

Read More »

காலம் கனியும் போது கட்டாயம் திருமணம் நடக்கும் ; ராகுல் காந்தி

தனக்கு எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்போது நடக்கும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது 47 வயது ஆகும் நிலையில், அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் விதியின் மீது நம்பிக்கை …

Read More »

கதிர்காம சர்ச்சை குறித்து ஆராய விசேட குழு

கதிர்காமம் கோயிலினுள் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது சில வாரங்களுக்கு முன் கதிர்காமம் கோயிலில் காலை தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, கோயில் கதவைத் திறப்பதில் கோயில் நிர்வாகத் தரப்புக்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்கு நிலையான அபிவிருத்தி, வனவிலங்குகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா விசேட குழுவொன்றை …

Read More »

இந்தியா புறப்பட்டார் மஹிந்த

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு இன்று காலை இந்தியா புறப்பட்டார். அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றுள்ளார். சர்­வ­தேச பெளத்த கலா­சார சம்­மே­ளனம் மக­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடத்­த­வுள்ள பெளத்த கலா­சார மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்காகவே அவர் இந்தியா செல்கின்றார்.

Read More »

புகையிரதம் மோதி வயோதிபர் பலி!

சிலாபம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (26) மாலை வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் போமுல்லையைச் சேர்ந்த எச்.ரத்நாயக்க (63) என்று தெரியவந்துள்ளது. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது விபத்தா, தற்கொலையா என்று விசாரணை நடத்திவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.

முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.

Read More »

கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில், கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலத்தை இன்று (27) பிற்பகல் பொலிசார் மீட்டுள்ளனர். வவுனியா – உக்கிளாங்குளம், பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்த தியாகலிங்கம் ரகுவரன் (26) என்ற இளைஞன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளிக்கப்பட்டிருந்தது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பினால் மனமுடைந்த நிலையில் ரகுவரன் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 …

Read More »

சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது கட்டலோனியா

ஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரக் குடியரசாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்டலோனிய மக்கள் பெரும் சந்தோஷக் களிப்பில் சுதந்திரத்தைக் கொண்டாடி வருகின்றனர். கட்டலோனிய பாராளுமன்றில் இன்று (27) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம், ஸ்பெயினின் ஆளுகையில் இருந்து கட்டலோனியா சுதந்திரம் பெற்றுள்ளது. கட்டலோனியாவின் ஜனாதிபதியை உடனடியாகப் பதவி விலக்கி, அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ஸ்பெயின் பிரதமர் …

Read More »