மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப் படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப் பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி …
Read More »பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது! – மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி
“பேய்கள், பிசாசுகள் வந்துவிடும் என்பதற்காகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பம், துயரம், அவலத்தைச் சுமந்தபடி வாழமுடியாது. அவர்களது துயரத்துக்கு ஒரு தீர்வு விரைந்து எட்டப்படவேண்டும். இனியும் அவர்கள் காவல் இருக்கமுடியாது.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். “தன்னைப் பலவீனப்படுத்தினால் உண்மையில் பலம் பெறப்போவது பேய்தான்” என்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …
Read More »உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம்!
வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு சேர்க்கப்பட்டுள்ளபோதிலும் அங்கிருந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தைத் …
Read More »ஓவியா, சொன்னீங்களே செஞ்சீங்களா?:
ஓவியா சொன்னீங்களே செஞ்சீங்களா என்று அவரின் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் பேசினார் ஓவியா. பிக் பாஸ் விதிமுறைகளால் உங்களுடன் நேரடியாக பேச முடியவில்லை, 100 நாட்கள் முடியட்டும் லைவ்சாட் செய்வோம் என்று ட்விட்டரில் அறிவித்தார் ஓவியா. அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஓவியா கல்லூரி விழாக்களில் …
Read More »ஜிமிக்கி கம்மல் ஷெரில் சினிமாவுக்கும் வந்தாச்சு… ?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் வைரல் ஹிட்டடித்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலின் மூலம், கேரளாவைச் சேர்ந்த ஆசிரியைகளான ஷெரில் மற்றும் அன்னா எனும் இரண்டு இளம்பெண்கள் பிரபலமானார்கள். இந்தப் பாடலின் மூலம் ஷெரிலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும், தனக்கு நடிகர் சூர்யா நடித்த …
Read More »நடிகர் விஜய் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.
விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், குறித்த படத்திற்கான தணிக்கை சான்றுதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி தீபாவளியன்று மெர்சல் வெளிவரவிருக்கும் நிலையில், நடிகர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்குமிடையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த விடயம் ஏதும் வெளிவரவில்லை. எனினும் மெர்சல் படத்திற்கு இன்னும் தணிக்கை …
Read More »வடக்கின் கலாசாரத்தை அழிப்பதற்கு சிங்கள, பெளத்த இனவாதம் துடிக்கிறது! – வடக்கின் கல்வி அமைச்சர் எச்சரிக்கை
“கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் சிங்கள, பெளத்த இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டிருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்க இனப்படுகொலையும் நடைபெற்று வருகின்றது.” – இவ்வாறு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.நாவற்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு …
Read More »காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? – தேடி அலையும் உறவினர்களில் ஐவர் பெருந்துயரால் மரணம்!
காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துள்ள போதிலும் இது விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய, சர்வதேச ரீதியில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உறவினர்களைத் தேடிப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களுள் 5 பேர் கடந்த ஆறு மாத காலத்துக்குள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினமும் தாயொருவர் மரணடைந்துள்ளார். கொழும்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைவானில் …
Read More »சு.கவில் உள்ள மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு எதிரான மைத்திரியின் அதிரடி தொடர்கிறது! – பறிபோகிறது மேலும் சிலரின் பதவி
மஹிந்த அணியான பொது எதிரணிக்கு நேரடியாகத் தமது ஆதரவை வழங்கிவரும் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டிருந்த சூழலில் மேலும் சிலரின் பதவிகள் விரைவில் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கடந்த வியாழக்கிழமை மத்துகம மற்றும் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்களாக இருந்த குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகேவின் பதவிகள் பறிக்கப்பட்டு குறித்த தொகுதிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, அத்தனகல தொகுதியின் புதிய அமைப்பாளராக …
Read More »அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு உடன் தீர்வு வழங்குக! – பிரதமரை வலியுறுத்துகிறார் சி.வை.பி.ராம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்துகின்றார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வவுனியா மேல்நீதிமன்றத்தில் நான்கு வருடங்களாக இடம்பெற்ற தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் …
Read More »