Sunday , December 22 2024
Home / மலரவன் (page 89)

மலரவன்

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த விஜய் – அஜித் ரசிகர்கள்!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியானது மெர்சல் திரைப்படம். இந்த படம் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. படத்தில் மத்திய, மாநில அரசுகளை விளாசியிருக்கிறார் விஜய். மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் போர்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் குரல் கொடுக்க …

Read More »

இன்றைய ராசிபலன் 21.10.2017

மேஷம்:சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன் ரிஷபம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். …

Read More »

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் கிடைக்குமா? அற்புதம்மாள் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது. ஒரு மாதம் கிடைத்த பரோல் கடந்த மாதமே முடிவடைந்தாலும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க முதல்வரிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் …

Read More »

மீண்டும் ஒலிக்கும் கருணாநிதியின் குரல் – திமுகவினர் ஆரவாரம்

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தன் காந்தக்குரலில் உரையாற்றுவார் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கோபால் தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்து வருகிறார். அந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். முரசொலி பவளவிழாவை …

Read More »

மெர்சலில் ஜிஎஸ்டி காட்சிகள் திடீர் நீக்கம்: இன்கம்டாக்ஸ் ரெய்டு பயமா?

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்கு ரிலீசுக்கு முன்பே பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி காட்சியால் மத்திய அரசின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் முரளிராமசாமி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி என்று கூறப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்கிவிடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் …

Read More »

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை

சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து …

Read More »

கொதித்தெழுந்த எச்.ராஜா

ஜி.எஸ்.டி பற்றி மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீத ஜி.எஸ்.டி வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், அங்கே மருத்துவத்தை இலவசமாக தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. எனினும், இங்கு எல்லாவற்றையும் பணம் கொடுத்தே பெறுகிறோம் என மெர்சல் படத்தின் இறுதி காட்சியில் விஜய் வசனம் பேசியுள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மத்திய …

Read More »

இலங்கையில் கடித்த நாய்; பிரான்ஸில் உயிரிழந்த சிறுவன்!

இலங்கையில் குட்டி நாய் ஒன்றிடம் கடிவாங்கிய சிறுவன் பிரான்சில் உயிரிழந்தான். கிழக்கு பிரான்ஸ் நகரான ரோனில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்து வயதுச் சிறுவன் தன் குடும்ப சகிதம் விடுமுறையைக் கழிக்கவென இலங்கை வந்தான். திக்வெல்லையில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குட்டி நாய் அவனது காலைப் பதம் பார்த்தது. குட்டி நாய் என்பதால் அது குறித்து அவனது குடும்பத்தினர் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. நாடு திரும்பிய அவன், கடந்த …

Read More »

முச்சக்கர வண்டி வாங்க நினைத்தால் முந்திக்கொள்ளுங்கள்!

“நாட்டில் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கும் அதிகமான விபத்துக்களுக்கும் முச்சக்கர வண்டிகளே காரணம். இவற்றைத் தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி நிதியமைச்சிடம் கேட்டிருக்கிறேன். “மேலும், முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். “பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கும் வகையில், வெகு விரைவில் மின்சாரப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் விடப்படும்.” இவ்வாறு …

Read More »

65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை

கிடைக்கப்பெறும் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. அப் புள்ளிவிபர தகவலின் படி 2016 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மொத்தமாக 2036 ஆகும். இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 1686ம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 16 வயதிற்குட்பட்ட யுவதிகள் சுய …

Read More »