ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் செம்புவத்தை தோட்ட தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து அத்தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்டிரதன் செம்புவத்தை தேயிலை மலை சில வருட காலமாக பராமரிக்க படாமல் காடாக மாறியிருப்பதால் தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் பயத்தால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் …
Read More »பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பாலைச் சோலை பிரதேசத்தில் பத்து வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை நேற்று ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் கடந்த 21ஆம் திகதி சிறுமியை தந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டடையடுத்து சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் …
Read More »கேரள கஞ்சாவுடன் பெண் கைது
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையில் இயக்கச்சி பகுதியில் வைத்து 32 வயதுடைய குறித்த பெண் 4.70 கிலோ கிராம் கஞ்சாவுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
Read More »கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 9600 சம்பவங்கள் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரிவித்தார். றூவிஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு அட்டாளைச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்களில் 70 வீதமானவை குடும்ப உறவினர்களினாலேயே …
Read More »யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி! (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுப் பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினால் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது – 24) என்ற …
Read More »மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டது கூட்டமைப்பு !
புதிய அரசமைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தை தற்போது அது கைவிட்டுள்ளது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைமீது அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நாட்டில் நல்லிணக்கம் நிலவுவதற்கும் புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் …
Read More »இலங்கையை இறுக்கிப்பிடிக்கத் தயாராகிறது ஐ.நா.!
உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு ஆமைவேகத்தைக் கடைபிடித்துவருவதால் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரால் இன்றைய தினம், இலங்கை அரசுக்குக் கடுந்தொனியிலான செய்தியொன்று விடுக்கப்படும் என்றும், அதுவே ஐ.நாவின் இறுதி எச்சரிக்கையாகக்கூட அமையலாம் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டுவார கால பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள …
Read More »மைத்திரியின் செயல் அரசியல் கைதிகளின் சிக்கலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி!
“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தும்கூட, அவர்கள் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மாறாக ஏனைய சிலரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியதானது அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் திசை திருப்பும் மற்றும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியேயாகும்.” – இவ்வாறு பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து விடுத்துள்ள ஊடக …
Read More »வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு காலதாமதம்! – பப்லோவிடம் ஒப்புக்கொண்டார் சபாநாயகர்
“மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளமை உண்மைதான்.” – இவ்வாறு உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பிடம் நேரில் ஒப்புக்கொண் டார் சபாநாயகர் கரு ஜயசூரிய. இரண்டு வாரகால உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ …
Read More »அதிகாரப் பகிர்வு மக்களுக்கே! – அரசியல்வாதிகளுக்கு அல்ல என வவுனியாவில் மைத்திரி தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
“அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல. அது மக்களைப் பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்துகின்ற – துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக்கூடாது என்றும் கூறினார். வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் …
Read More »