Wednesday , August 20 2025
Home / மலரவன் (page 80)

மலரவன்

தினகரன் இன்று பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அபார வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் தினகரன் இன்று பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனைத்து அமைச்சர்களும் ஊட்டிக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் தேர்தல் பல தடைகளுக்கு பின்னர் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தலில் பலம் வாய்ந்த அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன். இவரது வெற்றி …

Read More »

பெண்ணை கற்பழித்த காவல் அதிகாரி

சிறையில் இருக்கும் தனது உறவினரை பார்க்க சென்ற இளம்பெண்ணை, காவல் அதிகாரி ஒருவர் பலவந்தமாக கற்பழித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 28 வயதுள்ள ஒரு பெண் சிறையில் இருக்கும் தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார். சிறைச்சாலையில் காவல் அதிகாரி ஒருவர் அப்பெண்ணை, அவரது உறவினரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரை அழைத்துச் செல்லும் போது அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதைப்பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என அவரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து …

Read More »

பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான்

சென்னை கொளத்தூரை சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை, அவருடன் சென்ற முனிசேகர் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்டப்பட்டார். அவருடன் சென்ற முனிசேகர் காயமைடந்தார். தினேஷ் சவுத்ரி, நாதுராம் ஆகிய கொள்ளையர்களும் பெரிய பாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், பெரிய பாண்டியனுடன் சென்ற …

Read More »

Kaalathin Kural 26-12-2017 News18 Tamilnadu tv Show

Watch Kaalathin Kural News18 Tamilnadu TV shows 26.12.17 | News18 Tamilnadu Tv show Kaalathin Kural 26/12/17 Latest Today Online Kaalathin Kural 26-12-2017 News18 Tamilnadu tv Show | 26-12-2017 Kaalathin Kural News18 Tamilnadu tv shows | News18 Tamilnadu tv Kaalathin Kural 26th December 201

Read More »

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி

கடந்த வாரம் பாகிஸ்தான் நடந்ததிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்பொழுது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் இறந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் உள்பட …

Read More »

தினகரனுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்கள்?

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாழ்த்து கூறியதாகவும், இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி அதிர்ச்சியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், …

Read More »

தினகரன் சுயேட்சை அல்ல சுயம்பு

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், எடப்பாடி …

Read More »

ஜெய்யுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம் – அஞ்சலி

ஜெய்யுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம்’ என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள படம் ‘பலூன்’. திகில் படமான இது, வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சாந்தினி தமிழரசன், யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். “ஒரு படத்தின் முழு கதையையும் கேட்டறிந்து, படித்த பிறகே அதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் . இந்த …

Read More »

ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக வை மிஞ்சிய நோட்டா

குஜராத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை விட 19,500 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜிக்னேஷ் மேவானி, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டல் பதிவு செய்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வெறும் 1,417 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த படுதோல்வியை சமூக வலைதளங்களில் பலர் கிண்டலடித்துவருகின்றனர். அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி நோட்டாவிடம் …

Read More »

எங்களை கட்சியில் நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன், முத்தையா, வி.பி.கலைராஜன், ஆகியோரை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன் அகியோர் மாவட்ட செயலாளர்கள் பதிவியில் இருந்து நீக்கப்பட்டனர். முத்தையா, …

Read More »