Tuesday , August 26 2025
Home / அருள் (page 146)

அருள்

வெகு விரைவில் தென்னிலங்கையை பதற வைக்க உள்ள செய்தி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்த முக்கியத் தகவல்களை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. விசாரணைகளின்போது முக்கிய சில தகவல்கள் கசிந்துள்ள நிலையில், அவை வெகு விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதி உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளையடுத்து …

Read More »

இன்றைய ராசிபலன் 22.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும்.மனஇறுக்கங்கள் உருவாகும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் …

Read More »

அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு

முத்து திரைப்படம் ஜப்பானில் ரீரிலீஸ் ஆவது குறித்து பேசிய ரஜினி, அசலைவிட இது உங்களுக்குப் பிடிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் – மீனா நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான படம் முத்து. தமிழகத்தில் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 1998-ல் ‘முத்து டான்சிங் மஹாராஜா என்ற பெயரில் ஜப்பானில் வெளியாகி அங்கு பெரும் ஹிட்டானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஜப்பானிய பதிப்பான ‘முத்து டான்சிங் மஹாராஜா (Muthu …

Read More »

மஹிந்த – மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தானே பிரதமர் என்று கூறிக்கொண்டு அரச நிதியை பயன்படுத்துவது தேசத்துரோகம் என்றும் குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த மற்றும் அவரது விசுவாசிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும்அவரது அமைச்சரவைக்கு எதிராக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட …

Read More »

சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு இதன் போது விளக்கம் …

Read More »

ரணில் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

Ranil

ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பிநிலைக்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. புதிய பிரதமரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு வரும் அதே சந்தர்ப்பத்தில், ரணிலுக்கும் நாடாளுமன்றம் …

Read More »

மைத்திரிக்கு செக் வைக்கும் கரு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால …

Read More »

இன்றைய ராசிபலன் 21.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனு சரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய …

Read More »

முதல்வர் எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்

கஜா புயாலால் தமிழக வரலாற்றில் டெல்டா மாவட்ட விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது கஜா புயல். ஏராளமான மக்கள் தன் வீடுகளை, சொத்துக்களை இழந்து பரிதாபமாக நிற்கிறார்கள் .இந்நிலையில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நலன் பேண் வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சில தினங்களுக்குமுன்பு வந்த கஜா புயலால் இதுவரை 8 மாவட்டங்கள் கடுமையாக …

Read More »

மற்றுமொரு முக்கிய முடிவுக்குள் நகரும் சம்பந்தன்

இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று மாலை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, …

Read More »