Tuesday , August 26 2025
Home / அருள் (page 145)

அருள்

கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பளினி, படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் …

Read More »

மாவீரர் தின நிகழ்வை தடை செய்ய கோரிக்கை

வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர், “நாட்டில் தீவிரவாத அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு சட்டத்தில் அனுமதியில்லை. எனவே, மாவீரர் தினம் என்பது அரசியல் அமைப்பிற்கு முரணான …

Read More »

தேர்தலை அறிவிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்குமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய ஜனவரி 9ஆம் திகதிக்கு பின்னர் எவ்வேளையிலும் தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்க முடியும். இதனால் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்கு இதுவே தீர்வாகும் என கூறி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில …

Read More »

சபாநாயகர் மீது கடும் ஆவேசத்தில் விமல்

ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பக்கச்சார்பாக செயற்படுகின்ற சபாநாயகரை நாம் இனியொரு போதும் சபாநாயகராக அங்கீகரிக்கப் போவதில்லை. ஆகையினாலேயே இன்று அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே என்று சபாநாயகரை விளித்தேன். இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படும் சபாநாயகரின் ஊடாக நாட்டின் அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வுகாண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் அமர்வுகளைப் புறக்கணித்து மஹிந்த தரப்பினர் வெளிநடப்புச் செய்திருந்தனர். இதையடுத்து …

Read More »

மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில் சபாநாயகர்?

அரசாங்கத்தினையோ, அமைச்சரவையினையோ சபாநாயகரால் ஏற்றுக்கொள்ள முடியாது எனின், எம்மாலும் அவரை சபாநாயகராக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படபோது வாய்மூலமாக வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இல்லை என்றும் சபாநாயகர் அறிவித்தார். எனினும் அன்றைய தினத்திற்குரிய ஹன்சார்ட் அறிக்கையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இடம்பெறாத ஒருவிடயம் …

Read More »

இன்றைய ராசிபலன் 23.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் …

Read More »

எழும்பூரில் சிக்கியது இந்த கறிதானா..? ஆய்வில் தகவல்

கடந்த 17 ஆம்தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த 2000 கிலோ இறைச்சி எடுக்க ஆள் இன்றி அநாதையாக கிடந்தது. எனவே அது சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு பிரியாணிக்காக வந்ததாக வதந்தி பரவியது. இந்த இறைச்சி கெட்டுப்போயிருந்ததால் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இது ஆட்டுக்கறியா, மாட்டுக்கறியா, நாய் கரியா, மான் கறியா என முடிவு செய்ய முடியாமல் இருந்தனர். இறைச்சியில் வால் நீண்டிருந்ததால் அது நாய் …

Read More »

இராஜதந்திரிகளை சந்திக்கும் மகிந்த

மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார் இலங்கையின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் இராஜதந்திரிகள் மத்தியில் கடும் விசனம் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read More »

கதைப்பது கவனம் ரணில் முக்கிய உத்தரவு…

நீதிமன்ற விசாரணைகள் குறித்த போதிய அறிவின்றி அவை தொடர்பாக கருத்து வெளியிடுவதை தவிர்க்குமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று வெளியிடப்பட்டள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு கட்சித் தலைவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். நீதிமன்ற விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து …

Read More »

தமிழனை அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது

தமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துவிட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், யுத்தத்தின் பின்னர் கடந்த ஒன்பது வருடங்களாக மாறி வந்த அரசாங்கங்கள் …

Read More »