நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பவர் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒருவராக இருக்கின்றார். அத்துடன் இவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, …
Read More »இன்றைய ராசிபலன் 29.11.2018
மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்தொடங்குவீர்கள். நட்பு வழியில்நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மகளுக்குநல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் …
Read More »அமைச்சர்கள் படையுடன் டெல்டாவில் களமிறங்கிய எடப்பாடியார்!!
அமைச்சர்கள் படையுடன் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடச் சென்ற முதலமைச்சர் முழு வீச்சில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது. மின் கம்பங்களை சீர் செய்ய மின் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு …
Read More »மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றுமொரு மனு
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடுமாறுக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவினை தம்பர அமில தேரர் தாக்கல் செய்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தமை 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் …
Read More »மைத்திரியின் இந்த நிலைக்கு ரணில் செய்த காரியம் அம்பலமானது
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்கமுடியாதென்ற ஜனாதிபதியின் தீர்மானத்தை ரணில் மறுதலித்திருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களாலேயே ரணிலை விட்டு அவர் பிரிந்ததாக தயாசிறி ஜெயெசேகர சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மா நாட்டின்போதே அவர் மேற்படி கூறினார். ”19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும் அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்க முடியாதென …
Read More »சபாநாயகரின் தந்திரம் அம்பலம்
சபாநாயகர் கருஜயசூரிய, ஹன்சாட் அறிக்கையொன்றை தந்திரமாக தயாரித்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை பிவித்துரு ஹெல உருமய கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் மேற்கொண்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஹன்சாட் அறிக்கையை சபாநாயகர் தந்திரமாக தயாரித்துள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் பிரதி தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார். இதனுடன் கடந்த 14, 15, 16, 19, 21 மற்றும் 23 …
Read More »கொழும்பில் பதற்றம்! விசேட அதிரடிப்படை குவிப்பு
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலார் ஒருவர் மீது தாக்கத்தல் மேற்கொண்ட புலனாய்வு அதிகாரி பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று காலை முன்னிலையானார். காலை 9 மணியளவில் ஆரம்பமான விசாரணை மீண்டும் 2.15 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய முப்படைகளின் பிரதானியை …
Read More »இன்றைய ராசிபலன் 28.11.2018
மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். …
Read More »தலைவர் பிரபாகரன் வீட்டை சுற்றிவளைத்துள்ள இலங்கை பொலிஸார்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தின் முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படும் நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தலைவர் வாழ்ந்த வீட்டையும் வீட்டுச் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கும் பணியில் சில இளைஞர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
Read More »ஆளும் தரப்பு இல்லாமல் கூடிய பாராளுமன்றம்
பாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய அமர்வின் போதும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்காக ஊடகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய சபை அமர்வில் ஆளும் தரப்பினர் ஒருவரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, …
Read More »