Monday , August 25 2025
Home / அருள் (page 138)

அருள்

மகிந்தவுக்கு மீண்டும் துரோகம் செய்த மைத்திரி

மைத்திரி மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட 5 வர்த்தமானி அறிவித்தல்களில் 4 …

Read More »

நான் ஜனாதிபதியாகியிருந்தால்….! பொன்சேகா வெளியிட்ட அதிரடி கருத்து!

பொன்சேகா

அமெரிக்காவில் அரச தலைவர்கள் மன நல மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்வதுபோல இலங்கையிலும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.இதுதொடர்பில் மேலும் கூறிய அவர்,“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னைப்பற்றி கடந்த கூட்டத்தில் சொன்னாராம். அதாவது பொன்சேகா ஆகிய நான் ஜனாதிபதியாக வந்திருந்தால் இப்படியெல்லாம் கட்சித் தலைவர்களை அழைத்துச் சந்தித்திருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்று அவர் …

Read More »

ஜனாதிபதியின் உளவியல் மீது பாரிய சந்தேகம்

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் குறிப்பிடவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சாடியுள்ளார்.இச்செயற்பாட்டின் காரணமாக அவரது நன்மதிப்பு குறைந்து வருகின்றது என்பதை நாட்டு மக்களிடம் அவர் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். எவ்விடத்தில் எவ்விடயம் தொடர்பில் கதைக்க வேண்டும் …

Read More »

இன்றைய ராசிபலன் 05.12.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: மறைந்துக்கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். தாய்வழியில் மதிப்புக் கூடும். புது வேலை அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். வீட்டை விரிவுப் படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் …

Read More »

சூடுபிடிக்கும் கொழும்பு!! மஹிந்தவின் இறுதி நிலைப்பாடு

தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தம்மிடம் எப்போதுமே இருப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அதுதொடர்பில் யாரும் வீணாக குழம்பிக்கொள்ளத் தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார். சிக்கிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று காலை இடம்பெற்றபோது அவர்களுடன் பேசிய மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். ”நீதிமன்ற தீர்ப்பை ஒருபோதும் அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும். இதில் யாரும் குழம்பிக் கொள்ள தேவையில்லை. …

Read More »

ஜனாதிபதியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி, நியமிக்கப்பட்ட பிரதமர் …

Read More »

நாளை நாடாளுமன்றத்தில் மகிந்த அணியினர் செய்யவிருக்கும் செயல்!

பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாளைய தினம் மீண்டும் இலத்திரனியல் வாக்கெடுப்புமூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் நாளைய சபை அமர்விலும் தமது அணி பங்கேற்காது என மஹிந்த கூட்டணி இன்றைய தினம் …

Read More »

சபாநாயகர் – மஹிந்த எதிர்பாராத சந்திப்பு

சபாநாயகர் கரு ஜயசூரியவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று நேரில் எதிர்பாராமல் சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் தந்தையாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, பொரளை தனியார் மலர்ச்சாலையில் சபாநாயகரை எதேச்சையாக சந்தித்தார். இதன்போது சபாநாயருக்கு அருகில் அமர்ந்திருந்து சில நிமிடங்கள் மஹிந்த அளவளாவியுள்ளார். எனினும், பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை.

Read More »

ரணிலின் அவசர அறிவிப்பு

ரணில் விக்கிரமசிங்க

அலரிமாளிகையில் தற்பொழுது பரபரப்பு நிலை நிலவுவதாகவும் அவசரமான செய்தியாளர் மாநாடு ஒன்றில் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் மாநாட்டினை ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாவது.. இதில், ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேன ஒரு முழுமையான சர்வாதிகாரியாக மாறாமல் அரசியலமைப்பை பின்பற்றவேண்டும் என அவரிடம் கேட்பதாக ரணில் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட அவர், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் நினைத்தபடி பிரதமரைத் தீர்மானிக்கமுடியாது எனவும் நாடாளுமன்றப் பெரும்பான்மை உள்ள ஒருவரே பிரதமராக நியமிக்கப்படவேண்டும் எனவும் கூறினார். …

Read More »

இன்றைய ராசிபலன் 04.12.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள்.புது நட்பு மலரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரிகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.  தொட்ட காரியம் துலங்கும் நாள். மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை …

Read More »