அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டனில் நடந்த இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கவர்னர் வித்யாசாகர் சென்னை திரும்பியதும் அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.
ஆனால் கவர்னர் எப்போது சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்படாததால் சசிகலா பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் வருகிற வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சசிகலா இன்று மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டனில் நடந்த இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.