அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தனியாக சிக்கியுள்ள 11 ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள்
சட்டசபைக்குள் தற்போது திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை. அதிமுக எம்.எல்.ஏக்களும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 11 பேரும் மட்டுமே உள்ளனர். திமுகவினரையே குண்டுக்கட்டாய் தூக்கிப் போட்டு விட்டது போலீஸ். ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.
சிலருக்கு ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் சட்டை கிழிந்து போய் விட்டது. ஷூ காலால் பலரை மிதித்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டசபைக்குள் தற்போது அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களும் சிக்கியுள்ளனர். இவர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. வலிமை வாய்ந்த திமுகவினரையே தூக்கிப் போட்டு விட்ட ஆளுங்கட்சியால் இந்த 11 பேரையும் என்ன செய்யப் போகிறதோ என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.