Thursday , February 6 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற அதிமுக பிரமுகர்!

தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற அதிமுக பிரமுகர்!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் விஷம் வைத்து 15 தெரு நாய்களை கொன்ற அதிமுக பிரமுகர் மீது வழக்கு தொடரக் கோரி தேசிய விலங்குகள் நல வாரியத்தினர் புகார் அளித்துள்ளனர்

சென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலப்பாக்கத்தில், அதிமுக பிரமுகர் அண்ணாதுரை வசித்து வருகிறார். தமது வீட்டில் வளர்த்து வரும் கோழிகளை தெரு நாய்கள் துரத்துவதால், ஆத்திரமடைந்த அவர், கடந்த 25-ஆம் தேதி, இறந்த கன்று குட்டி உடலில் விஷத்தை கலந்து வயல்வெளியில் வீசியுள்ளார். இதனை உட்கொண்ட தெரு நாய்கள், சிறிது நேரத்தில் மூக்கிலும், வாயிலும், ரத்தம் வெளியேறி பரிதாபமாக இறந்தன.

இறந்த நாய்களின் துர்நாற்றம் அதிகமானதை தொடர்ந்து, பொதுமக்கள் அருகில் உள்ள வயல் வெளியில் இறந்த நாய்களின் உடல்களை எரித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற விலங்குகள் நல வாரிய அதிகாரிகள், 8 நாய்களின் உடல்கள், இரண்டு குட்டி நாய்கள் மற்றும் ஒரு கன்று குட்டியின் உடல்களை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …