மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை திறக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனை காண ரசிகர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் சாலையில், நடிகர் சூரி தமது சகோதரருக்காக புதிய உணவகத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்த உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வர உள்ளதாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிவகார்த்திகேயனைக் காண திரண்டனர்.
மாணவர்களுடன் ரசிகர்கள் பலரும் குவிந்ததால், காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
நடிகர் சூரியும், சிவகார்த்திகேயனும் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் கூட்டணியாக நடித்தது ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.