தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏக்களான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த அவர்கள், தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு நல்லாட்சி தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை அழைத்துப் பேச வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவின் தோழமை கட்சி எம்எல்ஏக்கள் உட்பட 3 எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தனர்.
பின்னர் எம்எல்ஏக்கள் தமீமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க குரல் கொடுத்ததற்காக அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
https://www.youtube.com/watch?v=NYNtZauSU6Y