சென்னையில், டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அவரை பாதுகாத்தவர்கள், சசிகலா குடும்பத்தினர்தான் என கூறினார்.
எடப்பாடி பழனிசாமியையோ, ஓ. பன்னீர் செல்வத்தையோ தலைவர்களாக ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நடிகர் செந்தில், தேர்தலைச் சந்தித்து முதலமைச்சரானால் மட்டுமே அவர்களை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார்.
தனக்குப் பிறகும் 100 ஆண்டுகளைக் கடந்தும் அதிமுக மக்கள் நலனுக்காகப் பாடுபடும் இயக்கமாகத் திகழும் என ஜெயலலிதா கூறிய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு தகுதியானவர் டிடிவி தினகரன் தான் என்றும் செந்தில் கூறினார்.
https://www.youtube.com/watch?v=AU88D3CdCwg