அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில், 316 மருத்துவர்களுக்கான பணி ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்படுள்ள மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.