டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க கோரியும் காங்கிரசார் இன்று தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க கோரியும் காங்கிரசார் இன்று தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதைப் பற்றி அ.தி.மு.க. அரசும், மத்திய பா.ஜனதா அரசும் கவலைப்படவில்லை.
கடந்த 23 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரதமரிடம் முறையிட வாய்ப்பு கேட்டும் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.
தமிழக விவசாயிகளின் அனைத்து கூட்டுறவு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது.
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, வசந்த குமார் எம்.எல்.ஏ., செய்தி தொடர்பாளர் குஷ்பு, கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி தி.நகர் ஸ்ரீராம், செல்வப்பெருந்தகை தணிகாசலம், வேளச்சேரி ராஜ்குமார், கராத்தே செல்வம், பன்னீர், அகரம் கோபி, கொளத்தூர் கோபால், ரஞ்சன்குமார், ஐஸ் அவுஸ் தியாகு, ரவிராஜ், திருவான்மியூர் மனோகர், சசிகுமார், சித்ரா கிருஷ்ணன், நாச்சிக்குளம் சரவணன், தி.நகர் விக்னேஷ்வரன், ரஞ்சன்குமார், சக்திகுமார், கராத்தே செல்வம், ராஜசேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வட்டார காங்கிரஸ் சார்பில் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடல் தமிழ்வாணன், சண்முகம், கஜநாதன், தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரவாயல் தொகுதி சார்பாக மதுரவாயல் மார்கெட் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எம்.முருகன், சீனிவாசன், லோகநாதன், சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்கள். இந்துநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், மாநில பேச்சாளர் குமரிமகாதேவன், ராம்தாஸ், முன்னாள் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன், வர்த்தகப்பிரிவு மகாராஜா, கே.வி.திலகர், பூங்கொடி, புவனேஸ்வரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினார்கள். முடிவில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கண்ணன் நன்றி கூறினார்.
மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவரம் பகுதி தலைவர் நா.வெங்கடேசன் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பூவை.ஜேம்ஸ், அருளகிரி, சாந்த குமார், பாக்கியராஜ் உள்பட 70 பேர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரே பகுதி தலைவர்கள் தேசிய மணி, அரவிந்த் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை தலைவர் பத்மநாபன் மணலி நகர தலைவர் ரமேஷ் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.