தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் 270க்கும் மேற்ப்பட்ட பெரிய விசைப்படகுகள் தங்களுக்கு தங்கு கடல் மீன் பிடிப்பு வழங்க கோரி பல வருடங்களாக போராடி வந்த நிலையில் இவர்கள் தடையை மீறி கடந்த 18ம் தேதி தங்குகடல் மீன்பிடித்தலுக்கு சென்றதால், 163 விசைப்படகுகளுக்கு ஒரு மாதம் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் கடந்த இரு நாட்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு தங்கு கடல் மீன் பிடிப்பு வேண்டாம் எனக்கூறி சிறிய விசைப்படகுகள் இப்போராட்டத்தில் பங்கு கொள்ளாமால் இருந்து வந்த நிலையில் சிறிய விசைப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அமல் சேவியரிடம்; முறையிட்டு பகல் நேர மீன் பிடிப்பு அனுமதி வாங்கி 60 சிறிய விசைப்படகுகள் இன்று கடலுக்கு சென்று மீன்களுடன் இரவில் கறை திரும்பியவர்களை வட்டகாரர்கள் மற்றும் ஏலம் எடுப்போர் வரததாலும் பெரிய விசைப்படகினர் தடுத்ததால் மீனை விற்க முடியவில்லை எனக்கூறி மீன்வளத்துறை அலுவலகம் முன்பு மீன்வண்டிகளை நடுரோட்டில் நிறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் துறைமுக சாலையில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட சிறிய விசைப்படகு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலலி வருவதால் பெருமளவு போலீசார் பாதகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.