டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்தனர். கைதை தொடர்ந்து மேலும் பெரிய தவறுகள் வெளிவரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். அது தான் உச்சம் என்று சொல்ல முடியாது. மேலும் இது பற்றி விசாரித்தால் பெரிய தவறுகள் வெளிவரும். குற்றம் செய்தவர்கள் தவறுக்குரிய தண்டனையை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும்.
அதிகாரிகளை நாங்கள் தூண்டி விடுவதாக பிரசாரம் செய்கிறார்கள். பாரதீய ஜனதாவுக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. அதே சமயம் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும். எந்த கட்சியையும் பிளவு படுத்த வேண்டிய அவசியம் பாரதீய ஜனதாவுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.