சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட கரண் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட கரண் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் கரண் சின்ஹா கமிஷனர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் வாழ்த்து கூறினார்கள். அதன் பின்னர் உடனடியாக கரண் சின்ஹா ஆர்.கே.நகர் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
கரண் சின்ஹா 105-வது கமிஷனர் ஆவார். 1987-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். தற்போது கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு, சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவிலும் இவர் பணியாற்றி இருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட புறநகர் கமிஷனரகத்தில் ஆணையாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அவர் தற்போது சென்னை மாநகராக போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சென்னை ரெயிலில் பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணையும் இவரது மேற்பார்வையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.